/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மூணாறு ரோட்டை புதுப்பிக்காமல் சிக்கல் கிடப்பில் அபாய வளைவு மேம்பாடு
/
மூணாறு ரோட்டை புதுப்பிக்காமல் சிக்கல் கிடப்பில் அபாய வளைவு மேம்பாடு
மூணாறு ரோட்டை புதுப்பிக்காமல் சிக்கல் கிடப்பில் அபாய வளைவு மேம்பாடு
மூணாறு ரோட்டை புதுப்பிக்காமல் சிக்கல் கிடப்பில் அபாய வளைவு மேம்பாடு
ADDED : பிப் 20, 2024 05:04 AM
உடுமலை: உடுமலை - மூணாறு ரோட்டில், புதுப்பிப்பு பணிகளை மேற்கொண்டு, அபாய வளைவு பகுதியை மேம்படுத்தினால், பல்வேறு பாதிப்புகள் தவிர்க்கப்படும் என, இரு மாநில வாகன ஓட்டுநர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
உடுமலையிலிருந்து சின்னாறு வழியாக கேரள மூணாறு செல்லும் ரோட்டை, தமிழக - கேரள மக்கள் மற்றும் சுற்றுலா பயணியர் அதிகளவு பயன்படுத்தி வருகின்றனர். இதில், சின்னாறு வரையிலான ரோடு, நெடுஞ்சாலைத்துறை உடுமலை உட்கோட்டத்தால் பராமரிக்கப்படுகிறது.
ஆனைமலை புலிகள் காப்பக வனப்பகுதி வழியாக செல்லும் இந்த ரோட்டில், அபாய வளைவுள்ள கொண்டை ஊசி வளைவு பகுதி, 18வது கி.மீ., ல், உள்ளது.
மலைக்குன்று மீது, அமைந்துள்ள இந்த வளைவில், வாகனங்கள் விலகிச்செல்லும் அளவிற்கு, ரோடு அகலம் இல்லை.
இதனால், தாழ்வான பகுதியிலிருந்து உயரமான பகுதிக்கு ஒரு வாகனம் வரும் போது, எதிரே வரும் வாகனம், ஓரத்தில் நின்று வழிவிட வேண்டும்.
அப்போது, வளைவை ஒட்டியுள்ள, பள்ளத்தால், வாகனங்கள் தடுமாறுவதை தவிர்க்க, நெடுஞ்சாலைத்துறை சார்பில், தடுப்பு முன்பு அமைக்கப்பட்டது. மழைக்காலத்தில், இத்தடுப்புகள் சரிவது தொடர்கதையாக உள்ளது.
பல்வேறு பகுதிகளிலிருந்து மூணாறுக்கு செல்லும் சுற்றுலா வாகனங்கள், வளைவு பகுதியிலுள்ள அபாயம் குறித்து தெரியாமல் சென்று, விபத்திற்குள்ளாகின்றனர்.
வாகன ஓட்டுநர்கள் கூறியதாவது: மூணாறு ரோட்டில், உடுமலை பகுதியிலிருந்து காய்கறி மற்றும் இதர பொருட்கள் மறையூருக்கு கொண்டு செல்லப்படுகின்றன.
இத்தகைய சரக்கு வாகனங்கள், அபாய வளைவு பகுதியை கடக்க, பல்வேறு இடையூறுகள் உள்ளன.
பஸ்கள் செல்லும் போதும், பிற வாகனங்கள், வளைவிற்கு முன்பாகவே காத்திருக்க வேண்டியுள்ளது. பல முறை சரக்கு வாகனங்கள், வளைவு பகுதியில், விபத்திற்குள்ளாகியுள்ளன.
அப்போது, போக்குவரத்து முற்றிலுமாக துண்டிக்கப்பட்டு, பாதிப்பு ஏற்படுகிறது. நெடுஞ்சாலைத்துறை சார்பில், வளைவு பகுதியை மேம்படுத்தினால், முக்கிய வழித்தடத்தில் விபத்துகள் குறையும்.
மேலும், ரோட்டோரத்தில் மண் அரிப்பு ஏற்பட்டு, வாகனங்கள் விலகி செல்ல முடிவதில்லை. உடனடியாக அடிப்படை பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு, தெரிவித்தனர்.

