/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அணுகுசாலையில் விபத்து அபாயம்; வசதிகளை மேம்படுத்தணும்
/
அணுகுசாலையில் விபத்து அபாயம்; வசதிகளை மேம்படுத்தணும்
அணுகுசாலையில் விபத்து அபாயம்; வசதிகளை மேம்படுத்தணும்
அணுகுசாலையில் விபத்து அபாயம்; வசதிகளை மேம்படுத்தணும்
ADDED : நவ 17, 2024 10:04 PM

உடுமலை; உடுமலை அருகே, நான்கு வழிச்சாலையின் அணுகுசாலையும், மாவட்ட முக்கிய ரோடு சந்திப்பு பகுதியில், விபத்துகளை தவிர்க்க கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.
உடுமலை - செஞ்சேரிமலை ரோட்டில், ஏரிப்பாளையம் அருகே, பொள்ளாச்சி - திண்டுக்கல் நான்கு வழிச்சாலை குறுக்கிடுகிறது. அவ்விடத்தில், மேம்பாலம் கட்டப்பட்டு, அணுகுசாலையும் அமைக்கப்பட்டுள்ளது.
இதில், பாலத்தின் வடக்கு பகுதியில் செஞ்சேரிமலை ரோடு, அணுகுசாலையை விட பள்ளமாக அமைந்துள்ளது. மழைக்காலத்தில் மண் அரிப்பு ஏற்பட்டு, இருசக்கர வாகன ஓட்டுநர்கள் விபத்துக்குள்ளாகி வருகின்றனர்.
மழைக்குப்பின், பள்ளத்தில் மண் கொட்டி சீரமைக்கின்றனர். இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்த வேண்டும். மேலும், இந்த சந்திப்பு பகுதியில், தாறுமாறாக வாகனங்கள் செல்வதால், விபத்து அபாயம் உள்ளது.
குறிப்பாக, செஞ்சேரிமலை ரோட்டில், உடுமலை நோக்கி வரும் வாகனங்கள், மேடான பகுதியில் வரும் போது, அணுகுசாலையில் வாகனங்கள் வேகமாக வருவதால், வாகன ஓட்டுநர்கள் தடுமாறுகின்றனர்.
வாகனங்களின் வேகத்தை குறைக்கும் போது, மேடான பகுதியில் சிரமம் ஏற்படுகிறது. எனவே, அப்பகுதியில், தானியங்கி சிக்னல் அமைக்க வேண்டும். பள்ளமான பகுதியை முழுமையாக சீரமைத்து தார்ரோடு அமைக்க வேண்டும்.
இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் மற்றும் மாநில நெடுஞ்சாலைத்துறையினர் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும், என, வாகன ஓட்டுநர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.