/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பாதையை மறைக்கும் முட்புதர்கள்: வளைவில் விபத்து அபாயம்
/
பாதையை மறைக்கும் முட்புதர்கள்: வளைவில் விபத்து அபாயம்
பாதையை மறைக்கும் முட்புதர்கள்: வளைவில் விபத்து அபாயம்
பாதையை மறைக்கும் முட்புதர்கள்: வளைவில் விபத்து அபாயம்
ADDED : மார் 02, 2024 11:26 PM

பல்லடம்;பல்லடம் மங்கலம் ரோட்டில் இருந்து அறிவொளி நகர், ஆறுமுத்தாம்பாளையம், கரைப்புதுார் வழியாக செல்லும் ரோடு திருப்பூர் ரோட்டை இணைக்கிறது. ஏராளமான பள்ளி மற்றும் பனியன் கம்பெனி வாகனங்கள், இருசக்கர வாகனங்கள் உள்ளிட்டவை தினசரி இந்த ரோட்டை பயன்படுத்தி வருகின்றன.
ஆறுமுத்தாம்பாளையம் அரசு துவக்க மற்றும் உயர்நிலைப்பள்ளி அருகே உள்ள வளைவுப் பகுதியில், முட்புதர்கள் காடு போல் வளர்ந்துள்ளன.
இதனால், பாதை மறைக்கப்பட்டு எதிரே வரும் வாகனங்கள் தெரிவதில்லை. வளைவான பகுதி என்பதால், வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதிக்கொள்ளும் அபாயம் ஏற்பட்டு வருகிறது.
அரசு பள்ளி மாணவ, மாணவியரும் அதிக அளவில் இந்த வழித்தடத்தை பயன்படுத்தி வரும் சூழலில், விபத்து அபாயத்தை கருத்தில் கொண்டு, வளைவுப்பகுதியில் உள்ள முட்புதர்களை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.