/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ரிதன்யா மாமியார் ஜாமின் மனு தள்ளுபடி
/
ரிதன்யா மாமியார் ஜாமின் மனு தள்ளுபடி
ADDED : ஜூலை 12, 2025 12:53 AM
திருப்பூர்; இளம்பெண் தற்கொலை விவகாரத்தில், மாமியார் சித்ராதேவியின் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
அவிநாசியை சேர்ந்த இளம்பெண் ரிதன்யா, 27. கணவர் வீட்டாரின் கொடுமையால், தன் தந்தைக்கு ஆடியோ பதிவுகளை அனுப்பி வைத்து விட்டு அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
இது தொடர்பாக சேவூர் போலீசார் வழக்கு பதிவு செய்து, ரிதன்யாவை தற்கொலைக்கு துாண்டியதாக, கணவர் கவின்குமார், மாமனார் ஈஸ்வரமூர்த்தி மற்றும் மாமியார் சித்ராதேவி ஆகியோரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இவ்வழக்கில், தனது உடல் நிலையைக் காரணம் காட்டி, உரிய மருத்துவம் செய்து கொள்ள வேண்டிய காரணத்தால் ஜாமின் வழங்க வேண்டும் என, சித்ராதேவி சார்பில் ஜாமின் மனு தாக்கல் செய்யப்பட்டது. வக்கீல்கள் சின்னசாமி, சண்முகானந்தம் ஆகியோர் அவர் சார்பில் ஆஜராகினர்.
திருப்பூர் மாவட்ட முதன்மை கோர்ட்டில் நீதிபதி குணசேகரன் முன்னிலையில் இம்மனு நேற்று விசாரணைக்கு வந்தது. ரிதன்யாவின் தந்தை அண்ணாதுரை தரப்பில் வக்கீல்கள் சுப்ரமணியம், மோகன்குமார் ஆகியோர், ஜாமின் வழங்க எதிர்ப்பு தெரிவித்து வாதாடினர். விசாரித்த நீதிபதி குணசேகரன், சித்ராதேவியின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

