/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
போட்டி பூ மார்க்கெட் வியாபாரிகள் அதிர்ச்சி
/
போட்டி பூ மார்க்கெட் வியாபாரிகள் அதிர்ச்சி
ADDED : செப் 27, 2025 12:10 AM

திருப்பூர், ; திருப்பூர் மாநகராட்சியின் பூ மார்க்கெட் வளாகம் பின், தனியார் இடத்தில் நேற்று திடீரென இடம் சுத்தம் செய்து, கடைகள் வைக்க ெஷட் அமைக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த பூ மார்க்கெட் வியாபாரிகள் நேற்று மாநகராட்சி கமிஷனரைச் சந்தித்து மனு அளித்தனர்.
அதில் அவர்கள் கூறியுள்ளதாவது:
தினசரி பூ மார்க்கெட்டில் உள்ள கடைகளில் வியாபாரம் செய்கிறோம். இதை நம்பி ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தொழில் செய்கின்றனர். தற்போது ஆயுத பூஜை மற்றும் தீபாவளி விசேஷங்கள் நெருங்கி வருகிறது. இந்நாட்களில் பூ வியாபாரம் செய்ய ஆண்டு முழுவதும் காத்திருக்கிறோம். தற்போது மார்க்கெட் பின்புறம் திடீரென தனியார் இடத்தில் ெஷட்டுகள் அமைத்து பூ வியாபாரம் செய்வதற்கு கடைகள் தயார்படுத்தியுள்ளனர்.
இதனால் மார்க்கெட்டை மட்டுமே நம்பியுள்ள எங்களுக்கு வியாபாரம் பாதிக்கும் அபாயம் உள்ளது. எங்களை பாதுகாக்கும் வகையில், தனியார் இடத்தில் அமைக்கும் கடைகளுக்கு அனுமதி கொடுக்காமலும், அருகில் செயல்படும் கடைகளை அப்புறப்படுத்தியும் எங்கள் வாழ்வாதாரத்தை காப்பாற்ற வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.