/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சாலை அமைக்கும் பணிகள் துவங்கியது!
/
சாலை அமைக்கும் பணிகள் துவங்கியது!
ADDED : ஜன 30, 2024 12:09 AM
திருப்பூர்;நீண்ட நாள் இடைவெளிக்குப் பின் ரோடு சீரமைப்பு பணிகள் மாநகராட்சி பகுதியில் துவங்கியுள்ளன.
திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில், பிரதான ரோடுகள் சீரமைத்தல், குறுக்கு வீதிகள் மற்றும் தெருக்களில் புதிய ரோடு போடுதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது. கடந்த மாதம் தொடர்ந்து மழை பெய்த நிலையில், ரோடு போடும் பணி பெரும் பாதிப்பைச் சந்தித்தது.
இதனால், பெரிய அளவிலான பாதிப்பு உள்ள பகுதிகளில் மட்டும் பேட்ஜ்ஒர்க் மேற்கொள்ளப்பட்டு சமாளிக்கப்பட்டது. பிற பகுதிகளில் புதிய ரோடு போடும் பணியை மழை நின்ற பின் துவங்க நிர்வாகமே அறிவுறுத்தியது.
மழை ஓய்ந்த நிலையில், ரோடு பணி ஒப்பந்ததாரர்களை அழைத்து ஆய்வு நடத்தி, ரோடு பணிகள் துவங்க அறிவுறுத்தப்பட்டது.
இந்நிலையில், பொங்கல் பண்டிகை விடுமுறை அதன் தொடர்ச்சியாக தைப்பூசம், குடியரசு தினம் போன்ற தொடர் விடுமுறைகள் வந்தன.
இதனால், தொழிலாளர்கள் மீண்டும் பணிக்கு திரும்ப தாமதமானது. ஒரு சில இடங்களில் மட்டும் குறைந்த அளவிலான தொழிலாளர்களுடன் ரோடு பணி மேற்கொள்ளப்பட்டது. தற்போது தொழிலாளர்கள் திரும்பிய நிலையில், பணிகள் துவங்கியுள்ளன.
அவ்வகையில், மேற்கொள்ளப்படும் பணியை நேற்று மாநகராட்சி கமிஷனர் பவன்குமார் நேரில் சென்று ஆய்வு செய்தார்.