/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மழைநீரால் ரோடு சேதம்; சீரமைப்பது எப்போது?
/
மழைநீரால் ரோடு சேதம்; சீரமைப்பது எப்போது?
ADDED : நவ 08, 2024 11:11 PM

உடுமலை; போடிபட்டி ஊராட்சியில், மழை நீரால் ரோடு சேதமடைந்துள்ளதை, விரைவில் சீரமைக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
உடுமலை ஒன்றியம் போடிபட்டி ஊராட்சியில், சில நாட்களுக்கு முன்பு பெய்த மழையால் தார்ரோடு சேதடைந்துள்ளது.
என்.கே.எஸ். நகர் அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு செல்லும் ரோட்டின் அருகில், ஒட்டுக்குளத்தின் உபரி செல்வதற்கான கால்வாய் உள்ளது.
மழையால் கால்வாயில் மழைநீர் முழுவதும் செல்வதில், தார்ரோடும் அரித்து செல்லப்பட்டுள்ளது. இதனால் ரோட்டின் கற்கள் பெயர்ந்து பாதி வரை பள்ளமாக மாறிவிட்டது.
இரவு நேரங்களில், அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டுநர்களுக்கு ஆபத்தான பகுதியாக உள்ளது. ரோட்டோரம் முழுவதும் சேதமடைந்துள்ளதால், வாகன ஓட்டுனர்கள் பதட்டத்துடன் செல்ல வேண்டியுள்ளது.
காலை நேரங்களில், எதிரே வாகனங்கள் வரும்போது ஒதுங்குவதற்கும் இடமில்லாத நிலைதான் உள்ளது. மயானத்துக்கு செல்வதற்கும், பொதுமக்கள் அந்த வழிதடத்தை பயன்படுத்துகின்றனர்.
இவ்வாறு பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் வழித்தடமாக இருப்பதால், விரைவில் சிதிலமடைந்த ரோட்டை சீரமைக்க, ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை வேண்டுமென அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.