/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ரூ.7.64 கோடி மதிப்பில் சாலை மேம்பாட்டு பணி
/
ரூ.7.64 கோடி மதிப்பில் சாலை மேம்பாட்டு பணி
ADDED : மார் 29, 2025 11:28 PM
வெள்ளகோவில்: வெள்ளகோவில், காங்கயம் ஒன்றிய பகுதிகளில், 7.64 கோடி ரூபாய் மதிப்பிலான, சாலை மேம்பாட்டு பணிகள் நேற்று துவக்கி வைக்கப்பட்டது.
'நபார்டு' திட்டத்தில், முதலமைச்சர் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தில், ஊரக ரோடு மேம்பாட்டு பணி நடந்து வருகிறது. நடப்பு நிதியாண்டில், காங்கயம் மற்றும் வெள்ளகோவில் ஒன்றியங்களுக்கு உட்பட்ட கிராமங்களில், ரோடு பணிகள் நடக்க உள்ளன. அதற்கான பூமிபூஜை நேற்று நடந்தது.
மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மலர்விழி தலைமையில் நடந்த விழாவில், அமைச்சர் சாமிநாதன், 7.64 கோடி ரூபாய் மதிப்பிலான ரோடு பணிகளை துவக்கி வைத்தார்.
n காங்கயம் தாலுகா, முத்துார் பேரூராட்சிக்கு உட்பட்ட சின்னமுத்துார் பகுதியில் இயங்கும், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி நுாற்றாண்டு விழா நேற்று நடந்தது. அமைச்சர் சாமிநாதன் பங்கேற்று, மாணவ, மாணவியரையும், ஆசிரியர்களையும் வாழ்த்தி பேசினார். ஆர்.டி.ஓ., பெலிக்ஸ் ராஜா உட்பட ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.