/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ரோடு விரிவாக்க பணி போக்குவரத்து மாற்றம்
/
ரோடு விரிவாக்க பணி போக்குவரத்து மாற்றம்
ADDED : ஜன 07, 2025 10:56 PM

உடுமலை,; மடத்துக்குளம் - கணியூர் ரோட்டின் குறுக்கே பாலம் கட்டுமான பணி துவங்கியுள்ளதால், போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
திருப்பூர் - திண்டுக்கல் மாவட்ட எல்லையிலுள்ள மடத்துக்குளம் கணியூர் ரோட்டில், அதிக அளவு போக்குவரத்து காணப்படுகிறது. இந்த ரோட்டை விரிவுபடுத்த வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில், மடத்துக்குளத்திலிருந்து, கணியூர் - தாராபுரம் ரோட்டில், சோழமாதேவி மேடு பகுதியில் பாலம் மற்றும் கணியூர் வரை ரோடு விரிவாக்க பணிகள், ரூ.3.82 கோடி மதிப்பில் துவங்கப்பட்டுள்ளது.
இதனால், இந்த ரோட்டில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள், வழக்கமான வழியில் செல்லும் வகையிலும், பஸ், கன ரக வாகனங்கள் சோழமாதேவி ஊருக்குள் சென்று கணியூர் செல்லும் வகையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

