ADDED : ஜூலை 30, 2025 10:10 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர் மாநகராட்சி, 7வது வார்டு, போயம் பாளையத்திற்குட்பட்ட சக்தி நகர் மற்றும் கணபதி நகரில் சாலை பல்லாங்குழியாக உள்ளது.
மக்கள் வேண்டுகோளை ஏற்று, இங்கு தார் சாலை அமைக்க மாநகராட்சி சார்பில், ஒரு கோடியே 82 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. தார் சாலை அமைப்பதற்கான பூமி பூஜையில், வார்டு கவுன்சிலர் கவிதா, உதவி பொறியாளர் வேல்முருகன், அ.தி.மு.க., வார்டு செயலாளர் விஜயகுமார், அண்ணா நெசவாளர் கூட்டுறவு சம்மேளன முன்னாள் தலைவர் ஜெகநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.