sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

மலை வாழ் குடியிருப்புகளுக்கு ரோடு திட்டம்; எப்ப தாங்க நிறைவேறும்? இழுபறியால் போராட்டத்துக்கு தயாராகும் மக்கள்

/

மலை வாழ் குடியிருப்புகளுக்கு ரோடு திட்டம்; எப்ப தாங்க நிறைவேறும்? இழுபறியால் போராட்டத்துக்கு தயாராகும் மக்கள்

மலை வாழ் குடியிருப்புகளுக்கு ரோடு திட்டம்; எப்ப தாங்க நிறைவேறும்? இழுபறியால் போராட்டத்துக்கு தயாராகும் மக்கள்

மலை வாழ் குடியிருப்புகளுக்கு ரோடு திட்டம்; எப்ப தாங்க நிறைவேறும்? இழுபறியால் போராட்டத்துக்கு தயாராகும் மக்கள்


ADDED : அக் 08, 2024 11:36 PM

Google News

ADDED : அக் 08, 2024 11:36 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை : உடுமலை அருகே, மலைவாழ் மக்கள் குடியிருப்புகளுக்கு தார் ரோடு மற்றும் ஆறுகளின் குறுக்கே பாலம் அமைக்கும் திட்டம், இரு ஆண்டாக இழுபறியாகி வருவதால், மீண்டும் போராட்டத்திற்கு தயாராகி வருகின்றனர்.

ஆனைமலை புலிகள் காப்பகம், உடுமலை, அமராவதி வனச்சரகங்களில், 15 மலைவாழ் மக்கள் குடியிருப்புகளில், 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.

பாரம்பரியமாக வாழ்ந்து வரும் அவர்களுக்கு, வீடு மற்றும் விவசாய நிலங்களுக்கு வன உரிமை பட்டா வழங்கப்பட்டு வருகிறது.

மலைவாழ் மக்கள் குடியிருப்புகளுக்கு, அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும், என பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகின்றனர்.

இதில், உடுமலை வனச்சரகம், குருமலை, குழிப்பட்டி, மேல் குருமலை, பூச்சிக்கொட்டாம்பாறை, காட்டுப்பட்டி, மாவடப்பு, கருமுட்டி மலைவாழ் மக்கள் குடியிருப்புகளில், 640 குடும்பங்களைச்சேர்ந்த, 2 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர்.

இப்பகுதி மக்களுக்கு ரோடு வசதி இல்லாததால், விவசாய நிலங்களில் விளையும் விளை பொருட்களை விற்னை செய்வது, உணவுப்பொருட்கள் கொண்டு செல்வது, பள்ளிகளுக்கு மாணவர்கள் வருவதிலும் சிக்கல் ஏற்பட்டு வருகிறது.

மேலும், அவசர மருத்துவ தேவைக்கு, கம்பு, துணி கொண்டு, தொட்டில் கட்டி, மருத்துவமனைக்கு அழைத்து வரும் அவல நிலை உள்ளது. உரிய நேரத்தில் மருத்துவ சிகிச்சை கிடைக்காமல், உயிரிழப்புகளும் நடந்து வருகிறது.

இப்பகுதி மக்கள், மலைப்பகுதிகளில் நடந்தே செல்லும் நிலையில், அவசர தேவைகளுக்கு வாகனங்களில் வருவதற்கும், அரசு துறை அதிகாரிகள் அங்கு செல்வதற்கும், உடுமலையிலிருந்து, நா.மூ.,சுங்கம், அட்டகட்டி, அப்பர் ஆழியாறு வழியாக, 60 கி.மீ., துாரம் சுற்றி, குருமலை உள்ளிட்ட மலைவாழ் மக்கள் குடியிருப்புகளுக்கு வந்து செல்கின்றனர்.

எனவே, வன உரிமை சட்டத்தின் கீழ், மலைவாழ் மக்கள் பாரம்பரியமாக பயன்படுத்தி வந்த, திருமூர்த்திமலையிலிருந்து குருமலை வரை ரோடு அமைக்க வேண்டும், என கோரிக்கை விடுத்தனர்.

இதனை வலியுறுத்தி, கடந்தாண்டு, ஜூலை, 12ம் தேதி, உடுமலை குட்டை திடலில், நுாற்றுக்கணக்கான மக்கள், வனத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மூன்று நாட்கள் வரை போராட்டம் நீடித்த நிலையில், மாவட்ட கலெக்டர், வனத்துறை அதிகாரிகள் நடத்திய பேச்சு வார்த்தையில், உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டதால், போராட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டது.

இதனையடுத்து, திருமூர்த்திமலை முதல் குருமலை வரை, 5 கி.மீ., நீளத்திற்கு, வனச்சூழல் பாதிக்காத வகையில், ரோடு அமைக்க, ரூ.49 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு, பணிகளும் துவங்கின.

ஒரு சில நாட்கள் மலைவாழ் மக்கள் பணி மேற்கொள்ளப்பட்ட நிலையில், வனத்துறை தடுத்ததால், சிக்கல் ஏற்பட்டது.

அரசுத்துறை அதிகாரிகள் ஒருங்கிணைப்பு இல்லாததால், மலைவாழ் மக்கள் குடியிருப்புகளுக்கு ரோடு அமைக்கும் பணி ஒரு ஆண்டாக இழுபறியாகி வருகிறது.

கூட்டாறு பாலம்


அமராவதி வனச்சரகம் தளிஞ்சி மற்றும் தளிஞ்சி வயல் மலைவாழ் மக்கள் குடியிருப்பு பகுதியில், 600க்கும் மேற்பட்ட குடும்பங்களைச்சேர்ந்த, 1,500க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர்.

இப்பகுதி மக்கள், சின்னாறு, தேனாறு, பாம்பாறு ஆகிய மூன்றும் இணையும் கூட்டாறு பகுதியை கடக்க வேண்டிய நிலை உள்ளது.

மழைக்காலங்களில், கூட்டாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் போது, மாதக்கணக்கில், மலைவாழ் மக்கள் குடியிருப்புகள் தனித்தீவாக மாறுகிறது.

இதற்கு தீர்வு காண, கூட்டாற்றின் குறுக்கே, இரும்பு பாலம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. அதே போல், ஜல்லிபட்டியிலிருந்து, ஈசல் திட்டு மலைவாழ் மக்கள் குடியிருப்புக்கும் ரோடு அமைக்க ஆய்வு செய்யப்பட்டது. ஆனால், இத்திட்டமும் செயல்படுத்தப்படவில்லை.

மலைவாழ் மக்கள் குடியிருப்புகளுக்கு, அடிப்படை வசதி கிடைக்க ஆதாரமாக உள்ள ரோடு வசதியை செய்து தர வேண்டும்.

அதிகாரிகள் அலட்சியம்


மலைவாழ் மக்கள் சங்க மாநில துணைச்செயலாளர் செல்வன் கூறுகையில், 'கடந்தாண்டு முற்றுகை போராட்டம் நடத்தப்பட்ட நிலையில், மலைவாழ் மக்களின் பிரச்னைகளை உணர்ந்து, ரோடு அமைக்க அதிகாரிகள் உறுதியளித்து, அதற்கான நிதியும் ஒதுக்கப்பட்டது. அரசுத்துறை அதிகாரிகள் அலட்சியம் காரணமாக, திட்டம் நிறைவேறாமல் இழுபறியாகி வருகிறது. இதனால், மீண்டும் போராட்டத்தை துவக்க திட்டமிட்டுள்ளோம்,' என்றார்.






      Dinamalar
      Follow us