/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
/
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
ADDED : ஜன 09, 2025 11:33 PM

அவிநாசி; அவிநாசி நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு சார்பில், 36வது சாலை பாதுகாப்பு மாத விழா நடைபெற்றது.
பழைய பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்திலிருந்து துவங்கி புதிய பஸ் ஸ்டாண்ட் வரை, விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.
கோட்ட பொறியாளர் முருகபூபதி, உதவி கோட்ட பொறியாளர் செங்குட்டுவன், உதவி பொறியாளர் தரணிதரன், சிவசுப்ரமணியன், போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன், எஸ்.ஐ., லோகநாதன் மற்றும் போலீசார் பங்கேற்றனர்.
அதன்பின், புதிய பஸ் ஸ்டாண்டில் உள்ள ஆட்டோ ஓட்டுநர்கள், தனியார் மற்றும் அரசு பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் பிற வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து விதிமுறைகள் அடங்கிய விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன.

