/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குடியிருப்பு பகுதிக்கு சாலை; பி.டி.ஓ.,விடம் மக்கள் மனு
/
குடியிருப்பு பகுதிக்கு சாலை; பி.டி.ஓ.,விடம் மக்கள் மனு
குடியிருப்பு பகுதிக்கு சாலை; பி.டி.ஓ.,விடம் மக்கள் மனு
குடியிருப்பு பகுதிக்கு சாலை; பி.டி.ஓ.,விடம் மக்கள் மனு
ADDED : ஏப் 26, 2025 11:31 PM

அவிநாசி: அவிநாசி ஒன்றியம், பழங்கரை ஊராட்சி, தேவம்பாளையம் கிராமத்தில் உள்ள ஸ்ரீ நந்தவனம் குடியிருப்பு பகுதியில், 80 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
அப்பகுதியில், 2010ல் அமைக்கப்பட்ட தார் சாலை பயன்படுத்த முடியாத நிலையில் மிக மோசமாக உள்ளது. குறிப்பாக, மழைக்காலங்களில்நடந்து செல்பவர்களுக்கும், டூவீலரில் செல்பவர்களுக்கும் பெரும் சிரமம் ஏற்படுவதுடன் பல இடங்களில் பள்ளங்கள் ஏற்பட்டு மழைநீர் தேங்கி நிற்கும்.
இதனால், அடிக்கடி விபத்துகளும் ஏற்பட்டுள்ளது. 15 ஆண்டுகளாக சாலை பராமரிக்கப்படாததால் கற்கள் பெயர்ந்து,மிக மோசமாக இரவு நேரங்களில் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. எனவே, இந்த சாலையை சீரமைக்க வலியுறுத்தி, அப்பகுதி மக்கள் பி.டி.ஓ., (கிராம ஊராட்சிகள்) விஜயகுமாரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
மனுவை பெற்றுக்கொண்ட பி.டி.ஓ., 'இந்த ஆண்டுக்கான ஊராட்சி நிதியின் கீழ், விரைவில் கான்கிரீட் சாலை அமைக்கப்படும்,' என உறுதியளித்தார். இதனால், ஸ்ரீ நந்தவனம் குடியிருப்பு பொதுமக்கள் நிம்மதியுடன் கலைந்து சென்றனர்.

