/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சாலை பணி தாமதம் பொதுமக்கள் மறியல்
/
சாலை பணி தாமதம் பொதுமக்கள் மறியல்
ADDED : மார் 07, 2024 04:11 AM

அவிநாசி : அவிநாசி அருகே ராயன்கோவில் காலனி பிரிவிலிருந்து வேலாயுதம்பாளையம் செல்லும் 1.8 கி.மீ., துாரத்துக்கு சாலை பணிகள் துவங்கி, 3 மாதமாகியும் பணிகள் நடைபெறவில்லை.
இதனால், ஜல்லிக்கற்கள் பெயர்ந்து வாகனங்கள் செல்ல முடியாத நிலையில் உள்ளது. டூவீலரில் செல்வோர் கீழேவிழுந்து காயம் அடைகின்றனர். தொடர்ந்து பலமுறை ஊராட்சி நிர்வாகத்திடம் ரோடு பணிகளை விரைந்து முடிக்க கேட்டும் கண்டுகொள்ளவில்லை.
ஆவேசமடைந்த பொதுமக்கள் நேற்று மங்கலம் ரோட்டில், சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த பி.டி.ஓ., (பொது) ரமேஷ்குமார், அவிநாசி இன்ஸ்பெக்டர் ராஜவேல், வேலாயுதம்பாளையம் வி.ஏ.ஓ., மோகன் ஆகியோர் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.
அதில், நாளை (7ம் தேதி) பணிகள் துவங்கப்படும் என உறுதியளித்ததால், சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு மக்கள் கலைந்து சென்றனர்.

