/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சாலை பணியாளர்கள் முகமூடி ஆர்ப்பாட்டம்
/
சாலை பணியாளர்கள் முகமூடி ஆர்ப்பாட்டம்
ADDED : ஆக 18, 2025 10:34 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்; தொழிற்சங்க விரோத போக்கு, அதிகார துஷ்பிரயோகத்தில் நெடுஞ்சாலை துறை அமைச்சர் ஈடுபடுவதாக குற்றம்சாட்டியும், சாலை பணியாளர் வாழ்வாதார கோரிக்கைகளை கோர்ட் தீர்ப்பின்படி நிறைவேற்ற வலியுறு த்தியும், உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்ததை கண்டித்தும், தமிழ்நாடு நெடுஞ்சாலைதுறை சாலை பணியாளர் சங்க திருப்பூர் கோட்டம் சார்பில், திருப்பூர், தாராபுரம் உள்பட மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில், நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது.
அதில், பங்கேற்றவர்கள் முகமூடி அணிந்து, கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.