/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சாலைப் பணிகளை விரைந்து முடிக்கணும்!
/
சாலைப் பணிகளை விரைந்து முடிக்கணும்!
ADDED : ஜன 24, 2024 01:35 AM
திருப்பூர்;மாநகராட்சி பகுதியில் நிலுவையில் உள்ள சாலை பணிகளை விரைந்து செய்து முடிக்க பணி ஒப்பந்ததாரர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
திருப்பூர் மாநகராட்சி மைய அலுவலக கூட்டரங்கில், கமிஷனர் பவன்குமார் தலைமையில், மாநகராட்சி பொறியியல் பிரிவினர், சாலை பணி ஒப்பந்ததாரர்கள் உடன் ஆய்வுக் கூட்டம் நடந்தது.
தற்போது பல்வேறு வார்டுகளில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் பகுதி மற்றும் சிப்பம் வாரியாக மேற்கொள்ளப்பட்டுள்ள சாலை அமைத்தல் மற்றும் சீரமைத்தல் பணிகள் நிலை குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
கடந்த மாதம் மழை காரணமாக பணிகள் நிறுத்தப்பட்டிருந்தன. தொடர்ந்து பொங்கல் விடுமுறை உள்ளிட்ட காரணங்களால் முழு வீச்சில் சாலை பணிகள் துவங்குவது தாமதமாகியது. தற்போது, மழை நின்று விட்ட நிலையில், நிலுவையில் உள்ள பணிகளை விரைந்து செய்து முடிக்க அறிவுறுத்தப்பட்டது.
மேலும், நிதியாண்டு முடிவடைய உள்ளதாலும், லோக்சபா தேர்தல் அறிவிப்பு ெவளியாக உள்ள நிலையிலும், பகுதி வாரியாக புதிய சாலை மற்றும் சீரமைப்பு பணிகள் குறித்து உரிய ஆய்வு நடத்தி, அறிக்கை சமர்ப்பிக்கவும், பணிக்கான அனுமதி மற்றும் நிதி ஒதுக்கீடு பெறும் வகையிலும் அவற்றை விரைந்து மேற்கொள்ளவும் பொறியியல் பிரிவினருக்கு கமிஷனர் அறிவுறுத்தினார்.

