/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பொங்கல் விடுமுறை வெறிச்சோடிய ரோடுகள்
/
பொங்கல் விடுமுறை வெறிச்சோடிய ரோடுகள்
ADDED : ஜன 16, 2025 11:37 PM

உடுமலை; உடுமலை சுற்றுப்பகுதிகளில் கடந்த 3 நாட்களாக பொங்கல் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது. தைப்பொங்கல், மாட்டுப்பொங்கல் கொண்டாட்டத்தை தொடர்ந்து, நேற்று கிராமங்களில் காணும் பொங்கல், பூப்பொங்கல் கொண்டாடப்பட்டது.
திருமூர்த்திமலை, அமராவதி அணை உள்ளிட்ட சுற்றுலா மையங்களில், பொதுமக்கள் கூட்டம் அதிகளவு காணப்பட்டது. மேலும் பக்தர்கள் அமணலிங்கேஸ்வரர் கோவில் உட்பட பல்வேறு கோவில்களுக்கு சென்று வழிபட்டனர்.
மேலும் உடுமலையை சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள நீர் நிலைகளுக்கு நன்றி செலுத்தும் வகையில், பெண்கள் பூப்பறித்து, நீர் நிலைகளில் இட்டு, கொண்டாடினர்.
பொங்கல் திருவிழா, தொடர் விடுமுறை காரணமாக, உடுமலையில், பெரும்பாலான வணிக நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.
பொதுமக்கள் வருகையும் குறைவாக காணப்பட்டதால், நெரிசல் மிகுந்து காணப்படும், கச்சேரி வீதி, வ.உ. சி., வீதி, ராஜேந்திரா ரோடு, தளி ரோடு, கல்பனா ரோடு உட்பட பிரதான ரோடுகள், வெறிச்சோடி காணப்பட்டது.