/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
காய்கறி மாலை அணிந்து சாலையோர வியாபாரிகள் மனு
/
காய்கறி மாலை அணிந்து சாலையோர வியாபாரிகள் மனு
ADDED : ஜூலை 18, 2025 11:49 PM

திருப்பூர்; நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் வீடு வழங்க கோரி, சாலையோர வியாபாரிகள், காய்கறிகளை மாலையாக அணிந்துவந்து, கலெக்டர் அலுவலகத்தில் நேற்று முறையிட்டனர்.
கொங்கு வியாபாரிகள் நலச்சங்க நிர்வாகிகள் மற்றும் ரோட்டோர வியாபாரிகள், காய்கறிகளை மாலையாக அணிந்து, வந்து, நேற்று கலெக்டர் அலுவலகத்தில் முறையிட்டனர்.
அவர்கள் கொடுத்த மனு:
குறு, சிறு சாலையோர வியாபாரிகளுக்கு, தமிழக அரசின், நலத்திட்ட உதவிகளை வழங்க வேண்டும். கணவரை இழந்த பெண்கள், மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்றவர்கள், சாலையோர வியாபாரிகளாக உள்ளனர்; அனைவருக்கும் அரசு உதவி செய்ய வேண்டும்.
கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக, வாடகை வீட்டில் வசித்து வரும், வியாபாரிகளுக்கு, நகர்ப்புற வாழ்வாதார மேம்பாட்டு வாரியம் சார்பில், வீடு வழங்க வேண்டும். வியாபாரம் செய்ய ஏதுவாக, தள்ளுவண்டி வழங்க வேண்டும்.
இவ்வாறு, மனுவில் கூறியுள்ளனர்.