ADDED : நவ 11, 2024 04:14 AM
திருப்பூர் : கே.வி.ஆர்., நகர் உதவி கமிஷனர் நாகராஜனுக்கு கொள்ளையர் நடமாட்டம் இருப்பதாக கிடைத்த தகவலை தொடர்ந்து, திருப்பூர் தெற்கு எஸ்.ஐ., ரஜினிகாந்த் தலைமையிலான போலீசார் மத்திய பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள ஒரு லாட்ஜில் சோதனையிட்டனர்.
சிவகங்கையை சேர்ந்த 17 வயது சிறுவர்கள் இருவர், 19 வயது இளைஞர் ஒருவர் பட்டாக்கத்தியுடன் தங்கியிருந்தனர். அவர்களை கைது செய்து விசாரித்த போது, நண்பர்கள் மூவருடன் கூட்டு சேர்ந்து, திருப்பூர் மாநகர பகுதிகளில் கொள்ளையடிக்க திட்டமிட்டிருந்தது தெரியவந்தது. கைதானவர்களில் இருவர் மீது, தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில், திருட்டு மற்றும் கஞ்சா வழக்குகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
போலீஸ் கமிஷனர் லட்சுமி வெளியிட்ட அறிக்கையில், 'திருப்பூர் மாநகர எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில், சட்ட விரோத செயல்களுக்காக ஆயுதம் ஏந்துபவர்கள் மீது மிக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்று கூறியுள்ளார்.