தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதை... பாறைக்குழி விவகாரம்; கழிவுநீர் பிரச்னையுடன் இணைந்த கனிம வளம்

கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதை... பாறைக்குழி விவகாரம்; கழிவுநீர் பிரச்னையுடன் இணைந்த கனிம வளம்

கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதை... பாறைக்குழி விவகாரம்; கழிவுநீர் பிரச்னையுடன் இணைந்த கனிம வளம்


ADDED : செப் 30, 2026 07:12 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 30, 2026 07:12 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சி சார்பில் முதலிபாளையத்தில் உள்ள காலாவதியான பாறைக்குழியில் பல ஆண்டுகளாக குப்பைக் கழிவுகள் கொட்டப்பட்டு வந்தன.

அப்பகுதி மக்கள் தெரிவித்த கடும் எதிர்ப்பைத் தொடர்ந்து, சென்னை ஐகோர்ட் உத்தரவின் பேரில், அங்கு குப்பை கொட்டுவது நிறுத்தப்பட் டது. அங்கு தேங்கியுள்ள கழிவுநீரை அகற்றவும் ஐகோர்ட் வழிகாட்டுதல் வழங்கியிருந்தது.

இதனிடையே, 'முதலிபாளையம், நல்லுார் பாறைக்குழிகளில் சட்ட விரோதமாக, விதிகளை மீறி கனிமங்கள் வெட்டி எடுக்கப்பட்டுள்ளது' எனக்கூறி, அப்பகுதியைச் சேர்ந்த வள்ளியம்மாள் உள்ளிட்ட, 4 பேர் ஐகோர்ட்டில் புதிய மனு தாக்கல் செய்தனர்.

வழக்கை விசாரித்த கோர்ட், திருப்பூர் மாவட்ட கலெக்டர் உத்தரவுபடி, வட்ட அளவிலான பணிக்குழு தனது ஆய்வை முடித்து, மூன்று மாதங்களுக்குள் சென்னை, சுரங்கத்துறை ஆணையர் மற்றும் இயக்குநரிடம் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்; பெறப்பட்ட அறிக்கை அடிப்படையில், சட்டத்திற்கு உட்பட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என உத்தரவிட்டுள்ளது.

முதலிபாளையம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குழு ஒருங்கிணைப்பாளர் வேலுசாமி கூறியதாவது:

முதலிபாளையம், நல்லுாரில், 32 ஏக்கர் பரப்பளவு கொண்ட பாறைக்குழி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் கனிமச் சுரங்க விதிகளை மீறி பாறைகள் வெட்டப்பட்டுள்ளன. குவாரியின் எல்லைப் பகுதியில், கட்டாயம் விடப்பட வேண்டிய, 7.5 மீட்டர் இடைவெளி பின்பற்றப்படவில்லை; பாதுகாப்பு வேலிகளும் அமைக்கப்படவில்லை. அருகிலுள்ள விவசாயியின் நிலத்தில் சுமார், 25 சென்ட் அளவுக்கு அத்துமீறி தோண்டப்பட்டுள்ளது.

வெட்டப்பட்ட பாறைக்குழிகளில் குப்பைகள் மற்றும் ரசாயனங்களை கொட்டி இந்த விதிமீறல்களை மறைக்க முயற்சிகள் நடந்துள்ளன. ஏற்கனவே, பாறைக்குழியில் குப்பைக் கொட்டப்பட்ட விவகாரத்தில், ஐகோர்ட், மாநகராட்சிக்கு விதித்த நஷ்ட ஈடு தொகையை, பாதிக்கப்பட்ட முதலிபாளையம் மக்களுக்கு பிரித்துக் கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்த உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதையாக, பாறைக்குழியில் குப்பைக் கொட்டும் பிரச்னை புகைந்து கொண்டே இருந்த நிலையில், தற்போது, கனிம விதிமீறல் விவகாரமும் இணைந்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us