/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ரோட்டரி 'செலிப்ரேஷன்' நிர்வாகிகள் பதவியேற்பு
/
ரோட்டரி 'செலிப்ரேஷன்' நிர்வாகிகள் பதவியேற்பு
ADDED : ஜூலை 15, 2025 10:57 PM

திருப்பூர்; 'ரோட்டரி திருப்பூர் செலிப்ரேஷன்' ஏழாம் ஆண்டு பதவியேற்பு விழா, அவிநாசி பழனியப்பா இன்டர்நேஷனல் பள்ளியில் நடந்தது.
அதன் தலைவராக சதீஷ்குமார், செயலாளராக சுரேஷ்குமார், பொருளாளராக சிவக்குமார், துணை தலைவராக மணிகண்டன் பதவியேற்றனர். திருப்பூர் ஸ்மார்ட் சிட்டி ரோட்டரி தலைவர் அருள்செல்வம், உருமு தனலட்சுமி கல்லுாரி பேராசிரியர் தமிழருவி மனோன்மணி, தனசேகர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர்.
மாவட்ட ஒருங்கிணைப்பாளர் லோகநாதன், மண்டல ஒருங்கிணைப்பாளர் ஆறுமுகம், உதவி கவர்னர் சதிஷ்குமார், மெல்வின் பாபு ஆண்டனி, வெங்கடேஷ் உள்ளிட்டோர் வாழ்த்தி பேசினர்.
விழாவின் ஒரு பகுதியாக, சமூக நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன; ரத்ததான முகாமில், 150 நபர்கள் ரத்த தானம் செய்தனர். பாலிதீன் கழிவு மறுசுழற்சி விழிப்புணர்வு, பள்ளி மாணவர்களுக்கு ஆடை வழங்கல்,ஸ்ரீரமண ஆசிரம குழந்தைகளுக்கு உணவு வழங்கல், தாய்ப்பால் தானம் செய்த தாய்மார்கள் கவுரவிப்பு, கல்வி உதவித்தொகை வழங்கல் போன்ற நிகழ்ச்சிகள் நடந்தன.
கல்வி உதவித்தொகையாக, 15 ஆயிரம் ரூபாய், மருத்துவ செலவுக்காக, 10 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான மருந்து, அரசு பள்ளி மாணவிக்கு, 10 ஆயிரம் கல்வி உதவி வழங்கப்பட்டது.