/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ரோட்டரி செலிப்ரேஷன் நிர்வாகிகள் பதவியேற்பு
/
ரோட்டரி செலிப்ரேஷன் நிர்வாகிகள் பதவியேற்பு
ADDED : ஜூலை 17, 2025 10:44 PM

திருப்பூர்; ரோட்டரி திருப்பூர் செலிப்ரேஷன் சங்கம் ஏழாம் ஆண்டு பதவியேற்பு விழா சமீபத்தில், அவிநாசி பழனியப்பா பள்ளியில் நடந்தது.
ரோட்டரி செலிப்ரேஷன் தலைவராக, சதீஷ்குமார், செயலாளர் சுரேஷ்குமார், பொருளாளராக சிவகுமார், துணை தலைவராக மணிகண்டன் மற்றும் ஆட்சி மன்றக்குழுவினர் பொறுப்பேற்று கொண்டனர். ரோட்டரி கிளப் ஆப் திருப்பூர் ஸ்மார்ட் சிட்டி தலைவர் அருள்செல்வம், தனலட்சுமி கல்லுாரி பேராசிரியர் தமிழருவி மனோன்மணிபங்கேற்றார். தனசேகர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர். மாவட்ட பொது செயலாளர் சிவபிரகாஷ், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் லோகநாதன், மண்டல ஒருங்கிணைப்பாளர் ஆறுமுகம், சதீஷ்குமார், மெல்வின் பாபு ஆண்டனி, வெங்கடேஷ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
விழாவில், தாய்ப்பால் தானம் செய்த, ஏழு தாய்மார்கள் கவுரவிக்கப்பட்டனர். சமூக பொறுப்புணர்வின் ஒரு பகுதியாக கல்விக்கும், நியூரோ மருத்துவ செலவுக்கும், சிறுமி ஒருவரின் பயண ஏற்பாடுகளுக்கும் நிதி உதவி அளிக்கப்பட்டது.