/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
இலங்கை தமிழ் மக்களுக்கு உதவ ரோட்டரியின் ப்ராஜக்ட் ஆஞ்சநேயா
/
இலங்கை தமிழ் மக்களுக்கு உதவ ரோட்டரியின் ப்ராஜக்ட் ஆஞ்சநேயா
இலங்கை தமிழ் மக்களுக்கு உதவ ரோட்டரியின் ப்ராஜக்ட் ஆஞ்சநேயா
இலங்கை தமிழ் மக்களுக்கு உதவ ரோட்டரியின் ப்ராஜக்ட் ஆஞ்சநேயா
ADDED : டிச 29, 2025 05:20 AM
திருப்பூர்: இலங்கையில் சமீபத்திய வெள்ள சேதத்தில் இன்னும் உதவிகள் கிடைக்காமல் வாழ்வாதாரம் இழந்துள்ள தமிழ் மக்களுக்கு உதவிக்கரம் நீட்டியுள்ளன, திருப்பூர் ரோட்டரி சங்கங்கள்.
ப்ராஜக்ட் ஆஞ்சநேயா ஒருங்கிணைப்பாளர்கள் கூறியதாவது:
முல்லைத்தீவு மாவட்டத்தில் துணிக்காய் மண்டல காட்டுப்பகுதியில் உள்ள உயிலம்குளம், கோட்டாட்டியம், அம்பலப்பெருமாள் குளம் ஆகிய மலைக்கிராமங்களில் 350 குடும்பங்களை சேர்ந்த 2,000 தமிழ் மக்கள் வசிக்கின்றனர்.
சமீபத்திய வெள்ளத்தால் ஏற்பட்ட துயரங்களில் இருந்து இவர்கள் மீளவில்லை. வெவ்வேறு இடங்களில் இருந்து அனுப்பப்படும் உதவிப்பொருட்கள் இவர்களுக்கு கிடைப்பதில்லை. இவர்களுக்கு உடை, போர்வை, பாய், சமையல் பாத்திரம், மெழுகுவர்த்தி, நோட்டு புத்தகம், சோலார் அமைப்பு, கொசுவர்த்தி, பேட்டரி லைட், சார்ஜர், பவர் பேங்க், தையல் இயந்திரம், மளிகைப்பொருள், சோப்பு, மருந்து, ஜெனரேட்டர் போன்றவை தேவையாக உள்ளன.
அனைவரும் வழங்கினால் தேவையான அனைத்தும் கிடைக்கும். ரோட்டரி மாவட்டம் 3203ன் கவர்னர் தனசேகர் வழிகாட்டுதலில் திட்டம் துவங்கப்பட்டுள்ளது. உதவிப்பொருட்கள் சேகரித்து அனுப்பப்படும். மேலும் விபரங்களுக்கு: 98426 79239; 99403 66831.

