/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தண்ணீரின்றி கருகும் ரோட்டோர மரங்கள்! மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை தேவை
/
தண்ணீரின்றி கருகும் ரோட்டோர மரங்கள்! மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை தேவை
தண்ணீரின்றி கருகும் ரோட்டோர மரங்கள்! மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை தேவை
தண்ணீரின்றி கருகும் ரோட்டோர மரங்கள்! மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை தேவை
ADDED : மார் 01, 2024 12:37 AM
உடுமலை';தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில், காலியிடங்களில் நடப்பட்ட மரக்கன்றுகளை பராமரிக்க முக்கியத்துவம் அளிக்கப்படாமல், மரங்கள் தண்ணீரின்றி கருகும் அவலம் ஏற்பட்டுள்ளது.
உடுமலை, குடிமங்கலம் ஒன்றியத்துக்குட்பட்ட ஊராட்சிகளில், ஊரக வளர்ச்சித்துறை சார்பில், சில ஆண்டுகளுக்கு முன், சுற்றுச்சூழல் மேம்பாட்டுக்காக, காலியிடங்களில், மரக்கன்றுகள் நடப்பட்டன.
தமிழக அரசு, திருப்பூர் மாவட்ட நிர்வாகம் வழிகாட்டுதலின்படி, இத்திட்டத்துக்கு, அதிக ஆர்வம் காட்டப்பட்டது.
மரக்கன்றுகளை பராமரிக்க, வேலி அமைத்தல், தண்ணீர் ஊற்றுதல் உட்பட பணிகள் தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்ட பணியாளர்களைக்கொண்டு மேற்கொள்ளப்பட்டு, அனைத்துப்பகுதிகளிலும் மரக்கன்றுகள் சீரான வளர்ச்சி பெற்றன.
இந்நிலையில், இத்திட்ட பணியாளர்களுக்கு மாற்றுப்பணிகள் வழங்கப்பட்டு, மரக்கன்றுகள் பராமரிப்பு கைவிடப்பட்டது. இதனால், மரக்கன்றுகள், மரங்கள் தண்ணீரின்றி கருகி பரிதாப நிலையில் உள்ளது.
மழை இல்லாமல், வறட்சி நிலவி வருவதால், ஆயிரக்கணக்கான மரங்கள் கருகி, திட்டத்தின் நோக்கமே பாழாகி வருவதாக கிராம மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இதே போல், தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலை, மாவட்ட முக்கிய ரோடுகளின் ஓரத்தில், பராமரிக்கப்படும் மரங்களும், தண்ணீர் இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ளது.
குடிமங்கலம், உடுமலை ஒன்றியத்துக்குட்பட்ட, பல கிராமங்களில் மரக்கன்றுகள் கருகி வருவது குறித்து பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்துக்கு, மனு அனுப்பியுள்ளனர்.
தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத்திட்ட பணியாளர்களை, மரக்கன்றுகளுக்கு தண்ணீர் ஊற்றும் பணியில் ஈடுபடுத்த வேண்டும். இது குறித்து, ஒன்றிய அதிகாரிகளிடம் கோரிக்கை மனு அளித்தாலும், மாவட்ட நிர்வாகத்தின் ஒப்புதல் பெற வேண்டும் என தெரிவிக்கின்றனர்.
சில நாட்களில், மரக்கன்றுகள் அனைத்தும் கருகி விடும். மீண்டும் புதிதாக கன்றுகள் நடவு, பராமரிப்பு என அரசு நிதியை வீணடிப்பதை தவிர்த்து, ஒன்றிய அதிகாரிகள் தற்போதே மரங்களுக்கு தண்ணீர் ஊற்றி பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள், மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளனர்.

