sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

அவிநாசி கோவிலில் மறுபிறவி எடுத்த அரச மரம்! பசுமை தழைக்க பக்தர்கள் தவம் அவிநாசியப்பர் அருளினார் வரம்

/

அவிநாசி கோவிலில் மறுபிறவி எடுத்த அரச மரம்! பசுமை தழைக்க பக்தர்கள் தவம் அவிநாசியப்பர் அருளினார் வரம்

அவிநாசி கோவிலில் மறுபிறவி எடுத்த அரச மரம்! பசுமை தழைக்க பக்தர்கள் தவம் அவிநாசியப்பர் அருளினார் வரம்

அவிநாசி கோவிலில் மறுபிறவி எடுத்த அரச மரம்! பசுமை தழைக்க பக்தர்கள் தவம் அவிநாசியப்பர் அருளினார் வரம்


ADDED : ஜன 05, 2024 01:23 AM

Google News

ADDED : ஜன 05, 2024 01:23 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அவிநாசி;அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் முன், மறுபிறவி எடுத்துள்ள அரச மரத்தடியில், பிள்ளையார் கோவில் புதுப்பொலிவுடன் உருவாகி வருவது பக்தர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் வளாகத்தின் முன் அரசமரத்தடி பிள்ளையார் கோவில் உள்ளது. ஆறடி உயரம் கொண்ட பீடம் இடிந்த நிலையில் சிதிலமடைந்து காணப்பட்டது. அபிஷேகம், அலங்காரம் மற்றும் பூஜை செய்ய சிவாச்சாரியர்கள் மேலே ஏறி செல்ல பீடத்தில் உள்ள படிக்கட்டுகளும், பிள்ளையாரை சுற்றி பீடத்தில் பக்தர்கள் சுற்றி வருவதற்கும் வழி இல்லாமல் இருந்தது.

இதுதவிர, அரச மரத்தின் வேர்கள், பிள்ளையார் சிலையை சுற்றி படர்ந்ததால், நாளடைபில் சிலையும் சேதமடைந்தது. இந்நிலையில், கோவில் கும்பாபிஷேக திருப்பணி துவங்கியது. இதற்காக, 1.62 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், அரச மரத்தடி பிள்ளையார் கோவில் திருப்பணிக்காக, 2022 அக்.,27ம் தேதி பாலாலயம் நடைபெற்றது.

அதன்பின், மரத்தை சுற்றிலும் குழிகள் தோண்டும்போது அரச மரத்தின் வேர்களை, பொக்லைன் இயக்கியவர் தவறுதாக வெட்டினார். இதனால், அரசமரம், பட்டுப் போக ஆரம்பித்தது. மரம் வாடி இலைகள் உதிர்ந்தும் கிளைகள் காய்ந்தும் கிடப்பதை பார்த்த பக்தர்களும், பொதுமக்களும் அதிர்ச்சி அடைந்தனர். மீண்டும் மரம் தழைக்காதா என பக்தர்கள், அவிநாசியப்பரை மனமுருக வேண்டினர்.

ஆனால், அரச மரத்தின் நிலையை அறநிலையத்துறையினர் கண்டுகொள்ளவில்லை. இதையறிந்த, களம் அறக்கட்டளை நிறுவனர் சதீஷ்குமார் என்பவர் தனி ஒருவனாக, மரத்தை காப்பாற்றுவதற்காக கோவில் வளாகத்தில் அமர்ந்து உண்ணாவிரத போராட்டத்தை துவக்கினார். அவருடன், பசுமை ஆர்வலர்கள் பலரும் கைகோர்த்தனர்.

அதன்பின், சுதாரித்த ஹிந்து அறநிலையத்துறையினர் உடனடியாக கோவை வேளாண் கல்லூரி அதிகாரிகளிடம் ஆலோசனை கேட்டு அதன்படி மரம் பட்டுப் போகாமல் இருப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுத்தனர். மரத்தைச் சுற்றிலும் ஈரப்பதம் இருப்பதற்காக வேர்களின் பக்கவாட்டில் மணல் மூட்டைகளை அடுக்கி தண்ணீர் விட்டு மரத்திற்கு உயிர் கொடுக்க நடவடிக்கை எடுத்தனர். இதனால் கொஞ்சம் கொஞ்சமாக மரம் துளிர் விட துவங்கியது. காய்ந்த கிளைகளில் இலைகள் துளிர்த்தன.

------------

பட விளக்கம்

----------

அவிநாசி கோவில் முன் உள்ள அரச மரம் மீண்டும் தழைத்து, பசுமையாக காட்சியளிக்கிறது. அதன்கீழ், அரச மரத்தடி பிள்ளையார் கோவில் அமைக்கும் திருப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

வீழ்வேனென்று நினைத்தாயோ...

மரத்தை காப்பாற்ற போராட்டத்தை துவங்கிய சதீஷ்குமார் கூறியதாவது:அவிநாசி கோவிலின் அழகே அரச மரம் தான். அது கொஞ்சம் கொஞ்மாக மரணத்தை நோக்கி பயணிப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். எனவே, மரத்தை காப்பாற்றுமாறு கோவில் வளாகத்தில் அமர்ந்து போராட்டத்தை துவக்கினேன்.எங்களது அறக்கட்டளை நண்பர்கள் பலரும் இதற்கு உறுதுணையாக இருந்தனர். தொடர்ந்து, மரத்துக்கு தேவையான நுண்ணுாட்ட உரங்களையும், மருந்துகளையும் பல பகுதிகளில் இருந்து வேளாண் அதிகாரிகளின் அறிவுறுத்தல் படி மரத்திற்கு இட்டனர். இதனாலும், கோவில் நிர்வாகத்தின் தொடர் முயற்சியாலும் அரச மரம் தற்போது துளிர் விட்டு பசுமையாக காட்சியளிக்கிறது. அந்த அவிநாசியப்பரே மரத்தை வாழ வைத்து விட்டதாகவே எண்ணுகிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.



பிள்ளை வரம் அருளும் பிள்ளையார்

கோவில் சிவாச்சார்யார்கள் கூறியதாவது:கோவில் முன் உள்ள அரச மரத்து பிள்ளையார் மிகவும் சக்தி வாய்ந்தவர். கோவிலில் மட்டுமின்றி, பக்தர்களும் தாங்கள் எடுக்கும் முக்கிய பணிகளின் முதல் பூஜை அவருக்கு தான் செய்வர். குழந்தை இல்லாதவர்கள், தொடர்ந், 21 நாள் அரச மரத்து பிள்ளையாருக்கு தண்ணீர் ஊற்றி வழிபாடு செய்து, 9 முறை வலம் வந்தால், கண்டிப்பாக குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம். திருப்பணியின் போது காய்ந்த மரம், கோவில் நிர்வாகத்தின் தொடர் முயற்சியால் மீண்டும் தழைத்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.இவ்வாறு அவர்கள் கூறினர்.








      Dinamalar
      Follow us