/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பத்திரப்பதிவு அலுவலகத்தில் ரூ.1.84 லட்சம் பறிமுதல்; லஞ்ச ஒழிப்பு போலீஸ் திடீர் ரெய்டு

ADDED : அக் 24, 2024 06:29 AM
அவிநாசி : அவிநாசி பத்திரப்பதிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நேற்று திடீர் சோதனை மேற்கொண்டதில் சார் பதிவாளர் உள்ளிட்ட மூவரிடம் கணக்கில் வராத ஒரு லட்சத்து 84 ஆயிரத்து 670 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
திருப்பூர் மாவட்டம், அவிநாசி, சேவூர் ரோடு, சூளையில் பத்திரப்பதிவு அலுவலகம் செயல்படுகிறது. நேற்று மாலை இன்ஸ்பெக்டர் கீதாலட்சுமி தலைமையிலான லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், இங்கு திடீர் சோதனை செய்தனர். முன் வாயில் இரும்பு ஷட்டரை மூடிவிட்டு அலுவலர்கள், பத்திரப்பதிவு செய்ய வந்தவர்கள் மற்றும் பத்திர எழுத்தர்கள் என 50க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.
ஐந்து மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற சோதனையில், சார் பதிவாளர் வெங்கிடுசாமி மற்றும் பத்திர எழுத்தர்கள் மூன்று பேரிடம் கணக்கில் வராத ஒரு லட்சத்து 84 ஆயிரத்து 670 ரூபாயை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.
அதிரடி சோதனையால், நேற்று மாலை பத்திரப்பதிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டன.