/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மண்ணரை குளத்தில் கழிவுநீர் கலப்பதை தடுக்க... ரூ.2.90 கோடியில் திட்டம்! உள்ளூர் திட்டக்குழும நிதியில் தொகை ஒதுக்கீடு
/
மண்ணரை குளத்தில் கழிவுநீர் கலப்பதை தடுக்க... ரூ.2.90 கோடியில் திட்டம்! உள்ளூர் திட்டக்குழும நிதியில் தொகை ஒதுக்கீடு
மண்ணரை குளத்தில் கழிவுநீர் கலப்பதை தடுக்க... ரூ.2.90 கோடியில் திட்டம்! உள்ளூர் திட்டக்குழும நிதியில் தொகை ஒதுக்கீடு
மண்ணரை குளத்தில் கழிவுநீர் கலப்பதை தடுக்க... ரூ.2.90 கோடியில் திட்டம்! உள்ளூர் திட்டக்குழும நிதியில் தொகை ஒதுக்கீடு
ADDED : மே 17, 2025 02:33 AM

திருப்பூர் : மண்ணரை குளத்துக்கு செல்லும் வாய்க்காலில், கழிவுநீர் கலப்பதை தடுக்கும் வகையில், 2.90 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டத்துக்கு, தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.
திருப்பூர் மாநகராட்சி எல்லையான, ஊத்துக்குளி ரோடு மண்ணரை - பாரப்பாளையம் அருகே, பொதுப்பணித்துறையின் மண்ணரை உள்ளது. அணைக்காடு பகுதியில் உள்ள, நொய்யல் தடுப்பணையில் இருந்து, ராஜவாய்க்கால் வழியாக, குளத்துக்கு தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது; உபரிநீர் மீண்டும் நொய்யலில் கலக்கும் வகையில் வாய்க்கால் அமைக்கப்பட்டுள்ளது.
நீர்வரத்து தடைபட்டு, வறண்டு கிடந்த குளத்துக்கு, வேர்கள் அமைப்பினர் துார்வாரி சுத்தம் செய்து, வாய்க்கால்களை மீட்டெடுத்து, குளத்துக்கு தண்ணீர் கொண்டு சென்றனர்.
இருப்பினும், மாநகராட்சியின் சாக்கடை கழிவு நீர், பல இடங்களில் வாய்க்காலில் கலக்கிறது. இதன்காரணமாக, குளத்தில் ஆகாயத்தாமரை படர்ந்தும், கழிவுநீர்கலந்தும் மாசு ஏற்படுத்துகிறது.
மண்ணரை குளத்தை பராமரிக்க, மாவட்ட நிர்வாகமும், தன்னார்வலர் பங்களிப்புடன் பல்வேறு உதவிகளை செய்துள்ளது. முழுவதும் கம்பிவேலி அமைத்து, குளம் பராமரிக்கப்பட்டு வருகிறது. குளத்துக்கு செல்லும் வாய்க்காலில், கழிவுநீர் கலப்பதை தடுக்கும் வகையில், திட்டமிட வேண்டுமென, தன்னார்வலர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். அவ்வகையில், குளத்தை மேம்படுத்தும் வகையில், திருப்பூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி நிர்வாகம், 2021-22ல், அரசுக்கு புதிய கருத்துரு அனுப்பியது. குறிப்பாக, குளத்துக்கு வரும் வாய்க்கால்களில், மாநகராட்சி கழிவுகள் கலப்பதை தடுக்கும் வகையில் புதிய திட்டம் சமர்ப்பிக்கப்பட்டது.
அத்திட்டத்துக்கு, தமிழக அரசு ஒப்புதல் அளித்து, உள்ளூர் திட்டக்குழும நிதியில், 2.90 கோடி ரூபாய் மதிப்பீட்டில், கழிவுநீர் குளத்தில் கலப்பதை தடுத்து, மாற்றுப்பாதையில் கொண்டு செல்ல வாய்ப்பு உருவாகியுள்ளதாக, குளம் பராமரிக்கும் அமைப்பினர் தெரிவித்துள்ளனர். குளம் முழுவதும், ஆகாயத்தாமரை படர்ந்து மாசு ஏற்படுத்துகிறது.
குளத்துக்கு வரும் வாய்க்காலை அடைத்து வைத்து, குளம் முழுவதையும் துார்வாரி சுத்தம் செய்து, ஆகாயத்தாமரை படராமல் தடுக்க வேண்டும். அதேபோல், அணைக்காடு அணையில் இருந்து, குளம் வரை வரும் ராஜவாய்க்காலை, கான்கிரீட் வாய்க்காலாக மாற்ற வேண்டும் என்பதும் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது.
வேர்கள் அமைப்பின் நிர்வாகிகள் கூறுகையில், 'தமிழக அரசுக்கு, 2021-22ல், கருத்துரு அனுப்பியிருந்தோம்; கலெக்டர், மாநகராட்சி கமிஷனர், மக்கள் பிரதிநிதிகள் உள்ளிட்டோரின் முயற்சியால், உள்ளூர் திட்டக்குழும நிதியில், 2.90 கோடி ரூபாய் மதிப்பீட்டில், குளத்தில் கழிவுநீர் கலக்காமல் தடுக்கும் பணியை செய்ய, அரசு அங்கீகாரம் அளித்துள்ளது. ராஜவாய்க்காலில் இணையும் கால்வாய்களை மாற்றுப்பாதையில் கொண்டு செல்வதுடன், தண்ணீர் செல்லும் வாய்க்கால்களும் சீரமைக்கப்படும்,' என்றனர்.