/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மாணவர் குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சம் நிவாரண நிதி
/
மாணவர் குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சம் நிவாரண நிதி
மாணவர் குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சம் நிவாரண நிதி
மாணவர் குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சம் நிவாரண நிதி
ADDED : பிப் 10, 2025 07:42 AM

திருப்பூர் : ஊத்துக்குளி தாலுகா, செங்கப்பள்ளி அருகே பல்லக்கவுண்டன் பாளையத்தில், கடந்த 6 ம் தேதி, ஈரோடு நோக்கி சென்ற தனியார் பஸ் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. விபத்தில், விருமாண்டம்பாளையம் கிராமம், தில்லை குட்டைபாளையத்தை சேர்ந்த சந்திரன் மகன் பெரியசாமி, 19; சுண்டக்காம்பாளையம், ஊமச்சி வலசை சேர்ந்த செந்தில்குமார் மகன் ஹரிகிருஷ்ணன், 19 ஆகியோர் அதே இடத்தில் பலியாகினர். ஊமச்சி வலசை சேர்ந்த மாரிமுத்து மகன் குருராஜ், 19 என்பவருக்கு மூளைச்சாவு ஏற்பட்டது. இவரது உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன.
பஸ் விபத்தில் பலியான மூவருக்கும் முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து, தலா 3 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என, தமிழக அரசு அறிவித்திருந்தது. நேற்று நிவாரண நிதி வழங்கப்பட்டது. கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமையில், அமைச்சர் சாமிநாதன், எம்.எல்.ஏ., செல்வராஜ் ஆகியோர், விபத்தில் பலியான குடும்பத்தினரை நேரில் சந்தித்து, ஆறுதல் கூறினர்; தலா மூன்று லட்சம் ரூபாய்க்கான காசோலை வழங்கினர்.

