தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ஆர்.டி.ஐ. மனு; 30 நாளில் பதில் கட்டாயம்

ஆர்.டி.ஐ. மனு; 30 நாளில் பதில் கட்டாயம்

ஆர்.டி.ஐ. மனு; 30 நாளில் பதில் கட்டாயம்

1


UPDATED : அக் 15, 2026 05:31 PM

ADDED : அக் 15, 2026 05:16 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 15, 2026 05:31 PM ADDED : அக் 15, 2026 05:16 PM

1


1
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருப்பூர்: ‘‘தகவல் கோரும் மனுக்களுக்கு 30 நாட்களுக்குள் பதிலளிக்க வேண்டும்’’ என, மாநில தகவல் ஆணையர் இளம்பரிதி தெரிவித்தார்.

திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த அரசு துறை பொது தகவல் அலுவலர்களுக்கான விழிப்புணர்வு முகாமில் அவர் பேசியதாவது:

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி இந்திய குடிமக்கள் மட்டுமே தகவல் கோர முடியும். அரசு அலுவலகங்களில் ஏற்கனவே உள்ள ஆவணங்கள், அரசாணைகள், பதிவுசெய்யப்பட்ட தொழில்நுட்ப சாதனங்களில் உள்ள தகவல்களை வழங்கலாம். உதாரணமாக, ஒருவருக்கு ஏன் பட்டா வழங்கப்பட்டது எனக் காரணம் கேட்பதற்குப் பதிலாக, எந்த அடிப்படையில் பட்டா வழங்கப்பட்டது, அதற்காக அவர் சமர்ப்பித்த ஆவணங்களின் நகல்களைக் கோரலாம். அலுவலகத்தில் இல்லாத தகவலைப் புதிதாக உருவாக்கி வழங்க வேண்டியதில்லை.

தகவல் கோரும் மனுக்களைப் பதிவு செய்ய அனைத்து அலுவலகங்களிலும் தனிப் பதிவேடு பராமரிக்க வேண்டும். மனுக்களுக்கு 30 நாட்களுக்குள் பதிலளிக்க வேண்டும். தகவலை வழங்குவது தொடர்பான சந்தேகங்களைத் தீர்க்க, மாநில தகவல் ஆணையத்தில் சிறப்புப் பிரிவு அமைத்து, தொடர்பு எண் வழங்கப்பட உள்ளது.

ஓய்வுபெற்ற அதிகாரிகள், அலுவலர்களின் மனுக்கள் தொடர்பான பிரச்னைகளுக்கும் உதவ வேண்டும். பொது தகவல் அலுவலர்கள் மீதான வழக்குகளின் நிலுவையைக் குறைக்க, ஒரு மாதத்துக்குள் விரைவான நடவடிக்கை எடுக்கப்படும

இவ்வாறு, அவர் பேசினார்.

கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த அரசு துறை பொது தகவல் அலுவலர்களுக்கான விழிப்புணர்வு முகாமில், மாநில தகவல் ஆணையர் இளம்பரிதி பேசினார். இதில் பங்கேற்றோர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us