/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
திருப்பூருக்கு கூடுதல் பஸ்கள் இயக்குங்க! காலை, மாலை நேரங்களில் மக்கள் பாதிப்பு
/
திருப்பூருக்கு கூடுதல் பஸ்கள் இயக்குங்க! காலை, மாலை நேரங்களில் மக்கள் பாதிப்பு
திருப்பூருக்கு கூடுதல் பஸ்கள் இயக்குங்க! காலை, மாலை நேரங்களில் மக்கள் பாதிப்பு
திருப்பூருக்கு கூடுதல் பஸ்கள் இயக்குங்க! காலை, மாலை நேரங்களில் மக்கள் பாதிப்பு
ADDED : நவ 20, 2025 02:16 AM
உடுமலை: உடுமலையிலிருந்து, திருப்பூருக்கு குறைந்தளவு பஸ்களே இயக்கப்படுவதால், பொதுமக்கள் கடுமையாக பாதித்து வருகின்றனர். பயணிகள் எண்ணிக்கைக்கு ஏற்ப கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும்.
உடுமலையிலிருந்து, -திருப்பூர் செல்லும் வழித்தடத்தில், பல்லடம் நகரம் மற்றும், வழியோரத்தில், 50க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.
உடுமலை மற்றும் வழியிலுள்ள கிராமங்களிலிருந்து பின்னலாடை, நுாற்பாலை உள்ளிட்ட தொழிற்சாலைகளுக்கு, கிராமங்களில் இருந்து நாள் தோறும், நுாற்றுக்கணக்கான மக்கள் திருப்பூர், பல்லடத்துக்கு பயணிக்கின்றனர்.
இந்த வழித்தடத்தில், பல்லடம் வரையுள்ள, கிராமங்களுக்கு டவுன் பஸ் வசதியும் மிகவும் குறைவாகவே உள்ளது.
வழியோர கிராமங்களிலிருந்து, பள்ளி, கல்லுாரிகளுக்கு செல்லும் மாணவர்கள், தொழிற்சாலைகள், விவசாய பணிகளுக்கு செல்லும் பொதுமக்களுக்கு, மப்சல் பஸ்களே உள்ளன.
மாவட்ட தலைநகரமாக உள்ளதால், கலெக்டர் அலுவலகம் மற்றும் பல்வேறு அரசுத்துறை அலுவலகங்களுக்கு, பொதுமக்களும், அரசு அலுவலர்களும் திருப்பூருக்கு செல்கின்றனர்.
இவ்வாறு, தொழில், கல்வி, நிர்வாக முக்கியத்துவம் வாய்ந்த வழித்தடமாக, உடுமலை-- திருப்பூர் வழித்தடம் உள்ள நிலையில், அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பில், இயக்கப்பட்ட பஸ்கள் பெருமளவு குறைக்கப்பட்டுள்ளன.
அதிலும், பள்ளி, கல்லுாரிகள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு மக்கள் செல்லும் 'பிசி'யான, காலை மற்றும் மாலை நேரங்களில், சொற்ப அளவிலான பஸ்களே இருப்பதால், ஒரே பஸ்சில் நுாற்றுக்கணக்கானவர்கள் பயணம் செய்ய வேண்டியுள்ளதோடு, படியில் தொங்கல் பயணம் மேற்கொள்ளும் அவல நிலையும் உள்ளது.
பொதுமக்கள் கூறுகையில், 'காலை, மாலை நேரங்களில், திருப்பூருக்கு போதிய பஸ் வசதி இல்லை. போக்குவரத்துக்கழக அதிகாரிகள், வழித்தடத்தில் பயணிகள் எண்ணிக்கை அடிப்படையில், கூடுதல் பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.

