/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பஸ் ஸ்டாண்டிலிருந்து ஆம்னி பஸ்கள் இயக்கம்: திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தல்
/
பஸ் ஸ்டாண்டிலிருந்து ஆம்னி பஸ்கள் இயக்கம்: திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தல்
பஸ் ஸ்டாண்டிலிருந்து ஆம்னி பஸ்கள் இயக்கம்: திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தல்
பஸ் ஸ்டாண்டிலிருந்து ஆம்னி பஸ்கள் இயக்கம்: திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தல்
ADDED : நவ 20, 2025 02:15 AM
உடுமலை: உடுமலை பைபாஸ் ரோட்டில், ஆம்னி பஸ்கள் நிறுத்தப்படுவதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதற்கு தீர்வு காணும் வகையில் பஸ் ஸ்டாண்டிற்குள் இடமாற்றம் செய்ய நகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், இதனை செயல்படுத்த அரசு துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உடுமலை திருப்பூர், பொள்ளாச்சி, பழநி, தாராபுரம் என நகருக்குள் நுழையும் அனைத்து வாகனங்களும், சாதிக்பாட்சா பைபாஸ் ரோடு வழியாக வந்து செல்கின்றன.
நகரின் பிரதான ரோடுகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளை இணைக்கும் வகையில் அமைந்துள்ள இந்த ரோட்டில், மாலை நேரங்களில், சென்னை, பெங்களூரு மற்றும் பல்வேறு மாவட்டங்களுக்கு இயக்கப்படும் ஆம்னி பஸ்கள் தாறுமாறாக நிறுத்தப்பட்டு, சரக்கு மற்றும் பயணிகள் ஏற்றிச்செல்கின்றன.
இதனால், இந்த ரோட்டில் கடுமையான போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது. ஆம்னி பஸ்கள் நிறுத்த தனி இடம் ஒதுக்க வேண்டும், என பல ஆண்டுகளாக வலியுறுத்தப்படுகிறது.
இந்நிலையில், தற்போது பஸ் ஸ்டாண்ட் விரிவாக்கம் செய்யப்பட்டு, கூடுதல் பஸ் ஸ்டாண்ட் செயல்பட துவங்கியுள்ளது.
ஏற்கனவே இருந்த பஸ் ஸ்டாண்டிலிருந்து, பழநி, கடத்துார், கணியூர், மடத்துக்குளம், கொழுமம் என கிழக்கு பகுதிக்கு இயக்கப்பட்டு பஸ்கள், புதிதாக கட்டப்பட்ட கூடுதல் பஸ் ஸ்டாண்டலிருந்து இயக்கப்பட்டு வருகிறது.
இதனால், பஸ் ஸ்டாண்ட், கிழக்குப்பகுதியில் பஸ்கள் இயக்கப்படாமல், வீணாக உள்ள இடத்திலிருந்து, மாலை நேரங்களில் ஆம்னி பஸ்களை இயக்கும் வகையில் நகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளளது.
இதனால், சாதிக்பாட்சா புறவழிச்சாலையில் நிலவும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு ஏற்படும். எனவே, பஸ் ஸ்டாண்டிற்குள் ஆம்னி பஸ்கள் வந்து செல்லும் திட்டத்தை உடனடியாக செயல்படுத்த நகராட்சி நிர்வாகம், போக்குவரத்து துறை அதிகாரிகள், போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

