/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தென் மாவட்டங்களுக்கு கூடுதல் ரயில் இயக்குங்க
/
தென் மாவட்டங்களுக்கு கூடுதல் ரயில் இயக்குங்க
ADDED : அக் 29, 2025 11:51 PM
உடுமலை: உடுமலை வழியாக, தென் மாவட்டங்களுக்கு செல்ல போதிய ரயில்கள் இல்லாததால், பயணியர் சிரமத்துக்குள்ளாகின்றனர். எனவே, கூடுதல் ரயில்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கோவை - திண்டுக்கல் வழித்தடத்தில் உள்ள உடுமலை ரயில்வே ஸ்டேஷன் வழியாக, கோவை - மதுரை, திருவனந்தபுரம் - மதுரை, பாலக்காடு - சென்னை, பாலக்காடு - திருச்செந்துார், மேட்டுப்பாளையம் - திருநெல்வேலி ஆகிய ரயில்கள் இயக்கப்படுகின்றன.
உடுமலையிலிருந்து தென் மாவட்ட நகரங்களுக்கு செல்ல தினமும் ஏராளமான மக்கள் ரயிலில் செல்கின்றனர். ஆனால் அவர்களுக்கு தற்போது செல்லும் ரயில்கள் போதுமானதாக இல்லை.
இதனால், இந்த ரயில்களில் அமர இடமின்றியும், சிரமத்துடன் செல்லும் நிலை ஏற்படுகிறது. எனவே, உடுமலை வழியாக தென்மாவட்டங்களுக்கு கூடுதல் ரயில்கள் இயக்க, தெற்கு ரயில்வே அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். அப்போது தான் இந்த பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும்.

