/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தென் மாவட்டங்களுக்கு கூடுதல் ரயில் இயக்குங்க
/
தென் மாவட்டங்களுக்கு கூடுதல் ரயில் இயக்குங்க
ADDED : டிச 23, 2025 07:05 AM
உடுமலை: கோவை - திண்டுக்கல் வழித்தடத்தில் உடுமலை ரயில்வே ஸ்டேஷன் உள்ளது. இதன் வழியாக, கோவை - மதுரை, திருவனந்தபுரம் - மதுரை, பாலக்காடு - சென்னை, பாலக்காடு - திருச்செந்துார், மேட்டுப்பாளையம் - திருநெல்வேலி, துாத்துக்குடி ஆகிய ரயில்கள் இயக்கப்படுகின்றன.
உடுமலை பகுதியில், வெளி மாவட்டங்களை சேர்ந்தவர்கள், வட மாநிலத்தினர் பல்வேறு அரசு, தனியார் நிறுவனங்கள், கம்பெனிகளில் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் பெரும்பாலும் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல ரயிலில் செல்கின்றனர்.
ஆனால் அவர்களுக்கு தற்போது செல்லும் ரயில்கள் போதுமானதாக இல்லை. இயக்கப்படும் இந்த ரயில்களில் அமர இடமின்றியும், நெருக்கடியில் செல்லும் நிலை ஏற்படுகிறது.
தற்போது அரையாண்டு தேர்வு விடுமுறை, கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் பண்டிகை வரிசையாக வருகின்றன.
எனவே, உடுமலை வழியாக தென்மாவட்டங்களுக்கு கூடுதல் ரயில்கள் இயக்க, தெற்கு ரயில்வே அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
இந்த பிரச்னையில், மக்கள் பிரதிநிதிகளும் கவனம் செலுத்தி ரயில்வேக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.

