/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சிவா நிகேதன் பள்ளியில் 10ல் குழந்தைகளுக்கான ஓட்டம்
/
சிவா நிகேதன் பள்ளியில் 10ல் குழந்தைகளுக்கான ஓட்டம்
சிவா நிகேதன் பள்ளியில் 10ல் குழந்தைகளுக்கான ஓட்டம்
சிவா நிகேதன் பள்ளியில் 10ல் குழந்தைகளுக்கான ஓட்டம்
ADDED : ஆக 07, 2025 11:23 PM
திருப்பூர்; சிவா நிகேதன் பள்ளியில், கிட்டத்தான் (குழந்தைகளுக்கான ஓட்டம் - 2025) நடைபெற உள்ளது.
பள்ளி நிர்வாகத்தினர் கூறியதாவது:
குழந்தைகளின் மனநலம் சார்ந்த விழிப்புணர்வை மையமாக கொண்டு, குழந்தைகளுக்கான சமூக நிகழ்வாக, திருப்பூர் பெற்றோர் குழுமம் ஏற்பாடு செய்யும், 'குழந்தைகளுக்கான ஓட்டம் 2025', வரும், 10ம் தேதி, மங்கலத்தில் உள்ள சிவா நிகேதன் பள்ளி வளாகத்தில் நடைபெற உள்ளது.
இந்நிகழ்வின் வாயிலாக குழந்தைகள் சுறுசுறுப்பு, மகிழ்ச்சி மற்றும் மனவள நலன்கள் ஊக்குவிக்கப்படும். திருப்பூர் முழுக்க இருந்தும், பல்வேறு வயதில் உள்ள குழந்தைகள் மற்றும் பெற்றோர் பங்கேற்க உள்ளனர்.
இதில், 2.5 கி.மீ., குடும்ப ஓட்டம், 0 முதல் 9 வயது குழந்தைகள். 5 கி.மீ., குழந்தை ஓட்டம் 10 முதல், 14 வயது பிரிவு நடத்தப்பட உள்ளது. முழுமையான வளர்ச்சி என்ற குறிக்கோளுடன், குழந்தைகளை மையமாக கொண்டு இந்நிகழ்வு நடத்தப்படுகிறது. மகிழ்ச்சியான மற்றும் உறுதியான குழந்தை பருவத்தை, இந்நிகழ்ச்சி உருவாக்கும். இது குழந்தைகளின் ஓளிரும் எதிர்காலத்துக்கான இயக்கம்; மேலும், ஒற்றுமையை உருவாக்கும் சமூக பயணம், என்றனர்.