/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ரன்னர்ஸ் கிளப் மாரத்தான் திருப்பூரில் நாளை நடக்கிறது
/
ரன்னர்ஸ் கிளப் மாரத்தான் திருப்பூரில் நாளை நடக்கிறது
ரன்னர்ஸ் கிளப் மாரத்தான் திருப்பூரில் நாளை நடக்கிறது
ரன்னர்ஸ் கிளப் மாரத்தான் திருப்பூரில் நாளை நடக்கிறது
ADDED : ஜூலை 18, 2025 11:45 PM
திருப்பூர்; திருப்பூர் ரன்னர்ஸ் கிளப் அமைப்பின் சார்பில், 'டாப் லைட் திருப்பூர் ரன்னர்ஸ் மாரத்தான் 2025' நடத்தப்பட உள்ளது.
நாளை (20ம் தேதி), அலகுமலை வேலன் மஹாலில் மாரத்தான் துவங்குகிறது. இதில், திருப்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகள் மட்டுமின்றி, வெளிமாநிலங்களில் இருந்து, 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்க உள்ளனர். பங்கேற்க உள்ள வீரர்களுக்கான பிஐபி., மற்றும் டி-சர்ட் வழங்கும் 'எக்ஸ்போ', இன்று, பல்லடம் ரோட்டில் உள்ள லட்சுமி திருமண மண்டபத்தில், காலை, 9:00 முதல் மாலை, 5:00 மணி வரை நடைபெற இருக்கிறது.
இதில், முன்னணி விளையாட்டு நிறுவனங்கள் மற்றும் உடல் ஆரோக்கியம் சார்ந்த நிறுவனங்களின் கண்காட்சி மற்றும் விற்பனை அரங்குகள் இடம் பெறவுள்ளன. மாரத்தான் தொடர்புடைய உபகரணங்கள், உடைகள் மற்றும் ஊட்டச்சத்து பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்படும்.'மாரத்தான் போட்டியில் பங்கேற்போர் நேரில் வர வேண்டும்' என, ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.