/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஊரக வளர்ச்சித்துறை தொழிலாளர் ஆர்ப்பாட்டம்
/
ஊரக வளர்ச்சித்துறை தொழிலாளர் ஆர்ப்பாட்டம்
ADDED : ஏப் 24, 2025 10:38 PM
- நமது நிருபர் -
ஊரக வளர்ச்சித்துறை தொழிலாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூரில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஊராட்சிகளில் பணியாற்றும் குடிநீர் ஆப்ரேட்டர், துாய்மை பணியாளர், துாய்மை பாரத இயக்க மாவட்ட, வட்டார ஒருங்கிணைப்பாளர், கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர் உள்ளிட்ட பணியாளர்களின் கோரிக்கை ஏற்கப்பட்டுள்ளது. ஏற்றுக்கொண்ட கோரிக்கைகளுக்கான அரசாணை வெளியிட வேண்டும்.
பள்ளி துாய்மை பணியாளர், தற்காலிக மேல்நிலை தொட்டி இயக்குபவர்களுக்கும், ஊதியம் வழங்க வேண்டும். மாவட்ட நிர்வாகம், மார்ச், 2025 வரை, நிலுவையின்றி முழுமையாக வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்துக்கு, தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை தொழிலாளர்கள் சங்க வட்டார ஒருங்கிணைப்பாளர் சண்முகசுந்தரம் தலைமை வகித்தார்.

