/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஊரக வீடுகள் பழுதுபார்க்கும் திட்டம்; சீரமைக்கும் பணிகள் தீவிரம்
/
ஊரக வீடுகள் பழுதுபார்க்கும் திட்டம்; சீரமைக்கும் பணிகள் தீவிரம்
ஊரக வீடுகள் பழுதுபார்க்கும் திட்டம்; சீரமைக்கும் பணிகள் தீவிரம்
ஊரக வீடுகள் பழுதுபார்க்கும் திட்டம்; சீரமைக்கும் பணிகள் தீவிரம்
ADDED : மே 30, 2025 11:59 PM
உடுமலை; உடுமலை ஒன்றிய கிராம ஊராட்சிகளில், அரசு திட்டங்களின் கீழ் கட்டப்பட்ட, தற்போதுபழுதடைந்துள்ள வீடுகள் சீரமைக்கும் பணிகள் நடக்கிறது.
உடுமலை ஒன்றியத்தில், 38 ஊராட்சிகள் உள்ளன. கிராம ஊராட்சிகளில் பொருளாதார நிலையில் பின்தங்கியுள்ள குடும்பங்களுக்கு, பல்வேறு அரசு திட்டங்களின் கீழ் வீடு கட்டுவதற்கு மானியத்தொகை வழங்கப்படுகிறது.
பல ஆண்டுகளுக்கு முன்பு இவ்வாறு அரசு திட்டங்களின் கீழ் கட்டப்பட்ட வீடுகள் பழுதடைந்தும், குடியிருப்போருக்கு பாதுகாப்பில்லாத இடிந்து விழும் நிலையில் உள்ளது.
இவ்வாறு உள்ள வீடுகளை சீரமைப்பதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டது.
இதன்படி, 2024-25ம் ஆண்டில் 2001ம் ஆண்டுக்கு ஊரக பகுதிகளில் அரசு திட்டங்களின் கீழ் கட்ட வீடுகளில் பழுதுகளை சரிபார்க்க தகுதியுள்ள பயனாளிகள் பட்டியல் கேட்டக்கப்பட்டது.
உடுமலை ஒன்றியத்துக்குட்பட்ட, 38 ஊராட்சிகளிலும் 2001ம் ஆண்டுக்கு முன்பு அரசு திட்டங்களின் கீழ் கட்டப்பட்டு, தற்போது சிதிலமடைந்த வீடுகளைக் கொண்ட பயனாளிகள் பட்டியல், ஊரக வளர்ச்சித்துறைக்கு அனுப்பப்பட்டது.
அதில் தற்போது தகுதியுள்ள 2024-25, மற்றும் 2025-26ம் ஆண்டுக்கான பயனாளிகளுக்கு வீடுகளை சீரமைப்பதற்கு அரசு ஆணை வழங்கப்பட்டுள்ளது.
ஒன்றிய அலுவலர்கள் கூறியதாவது:
உடுமலை ஒன்றியத்திற்குட்பட்ட கிராம ஊராட்சிகளில், 2024-25ம் ஆண்டுக்கு 280 நடப்பாண்டுக்கு, 43 பயனாளிகளின் வீடுகளில் ஊரக வீடுகள் பழுதுபார்க்கும் திட்டத்தின் கீழ் சீரமைக்கும் பணிகள் துவக்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு வீடுகளிலும் அந்தந்த பழுதுகளுக்கு ஏற்ப நிதிஒதுக்கீடு செய்யப்படுகிறது.
இவ்வாறு கூறினர்.

