/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கொல்லத்துக்கு சிறப்பு ரயில்கள் சபரிமலை பக்தர்கள் எதிர்பார்ப்பு
/
கொல்லத்துக்கு சிறப்பு ரயில்கள் சபரிமலை பக்தர்கள் எதிர்பார்ப்பு
கொல்லத்துக்கு சிறப்பு ரயில்கள் சபரிமலை பக்தர்கள் எதிர்பார்ப்பு
கொல்லத்துக்கு சிறப்பு ரயில்கள் சபரிமலை பக்தர்கள் எதிர்பார்ப்பு
ADDED : டிச 08, 2025 05:30 AM
திருப்பூர்: ஈரோடு மற்றும் கோவையில் இருந்து இயங்கும் வகையில் சபரிமலை சிறப்பு ரயில் அறிவிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
சபரிமலைக்கு நாடு முழுதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு வருகின்றனர். ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து செல்லும் பக்தர்கள் வசதிக்காக, சிறப்பு ரயில்கள் தொடர்ந்து இயக்கப்படுகிறது.
விசாகப்பட்டினம், ஹூப்ளி, நரசபூர், மசூலிப்பட்டினம், சார்லபள்ளி, ைஹதராபாத், காக்கிநாடா உள்ளிட்ட பகுதியில் இருந்து இயங்கும் சபரிமலை சிறப்பு ரயில்களின் டிக்கெட் முன்பதிவு, தமிழகம் வரும் முன்பே முடிந்து விடுகிறது. ஏ.சி. முன்பதிவு பெட்டி நிறைந்து விடுகிறது.
இதனால், சேலம், ஈரோடு, திருப்பூர், கோவையில் இருந்து கொல்லம், சொர்ணுார், செங்கனுார் செல்ல டிக்கெட் முன்பதிவு செய்ய முடிவதில்லை; காத்திருப்போர் பட்டியல், 80 வரை எண்ணிக்கை நீள்கிறது.
வரும், 16ம் தேதி மார்கழி மாதம் பிறக்கிறது. 2026 ஜன. 14 மகரவிளக்கு பூஜை வரை சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கும். டிக்கெட் முன்பதிவு செய்யும் பக்தர்கள் வசதிக்காக ஈரோடு அல்லது கோவையில் இருந்து கொல்லத்துக்கு சபரிமலை சிறப்பு ரயில் இயக்க வேண்டும் என அய்யப்ப பக்தர்கள்வலியுறுத்துகின்றனர்.

