/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
விளையாட்டு போட்டிகளில் சாய்கிருபா சிறப்பு பள்ளி அசத்தல்
/
விளையாட்டு போட்டிகளில் சாய்கிருபா சிறப்பு பள்ளி அசத்தல்
விளையாட்டு போட்டிகளில் சாய்கிருபா சிறப்பு பள்ளி அசத்தல்
விளையாட்டு போட்டிகளில் சாய்கிருபா சிறப்பு பள்ளி அசத்தல்
ADDED : நவ 22, 2025 05:57 AM

திருப்பூர்: திருப்பூர் சாய் கிருபா சிறப்பு பள்ளி குழந்தைகள், கோவை விழாவில் நடந்த பல்வேறு விளையாட்டுகளில் பங்கேற்று பல பரிசுகளை பெற்றனர்.
கோவை ஹிந்துஸ்தான் கல்லுாரியில், கோவை விழா நடைபெற்றது. இந்த விழாவில், சிறப்பு நிலை மாணவர்களுக்கு பல்வேறு வகையான விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன.
அவ்வகையில், திருப்பூர் சாய் கிருபா சிறப்பு பள்ளி மாணவர்கள் பங்கேற்று, சிறப்பாக விளையாடி பரிசு வென்றுள்ளனர்.
வாலிபால் போட்டியில் சாய்கிருபா மாணவர்கள் முதலிடம் பிடித்துள்ளனர். குண்டு எறிதலில் சிவபாலன் முதலிடம், சைக்கிளிங்கில், மாணவி கலென்பேர்ட் முதலிடம் பிடித்து பரிசு கோப்பை வென்றார்.
மாணவர் சுகன் ஆதர்ஷ், எறிபந்து போட்டியில் இரண்டாமிடம், 200மீ., ஓட்டத்தில் தரணிநாதன் மூன்றாமிடம், 100மீ., ஓட்டத்தில் சுதிக் ஷா இரண்டாமிடம், சைக்கிள் ஓட்டும் போட்டியில் ஸ்ரீ தர்ஷினி மூன்றாமிடம் பிடித்துள்ளனர்.
விளையாட்டு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ, மாணவியரை, சாய்கிருபா சிறப்பு பள்ளி நிறுவனர் கவின் திருமுருகன் பாராட்டினார்.

