/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஊழியர்களை மிரட்டும் 'சமூக' ஆர்வலர்கள்; ரேஷன் பணியாளர்கள் சங்கம் வேதனை
/
ஊழியர்களை மிரட்டும் 'சமூக' ஆர்வலர்கள்; ரேஷன் பணியாளர்கள் சங்கம் வேதனை
ஊழியர்களை மிரட்டும் 'சமூக' ஆர்வலர்கள்; ரேஷன் பணியாளர்கள் சங்கம் வேதனை
ஊழியர்களை மிரட்டும் 'சமூக' ஆர்வலர்கள்; ரேஷன் பணியாளர்கள் சங்கம் வேதனை
ADDED : நவ 22, 2025 05:57 AM
திருப்பூர்: ரேஷன் கடைகளில் பணியாற்றும் ஊழியர்களை சமூக ஆர்வலர்கள் என்ற பெயரில் மிரட்டுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பணியாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
இது குறித்து, தமிழ்நாடு ரேஷன் கடை பணியாளர் சங்க மாநில தலைவர் ராஜேந்திரன் கூறியதாவது:
திருப்பூர் மாவட்டத்தில், அதிகளவில் வெளி மாவட்ட மற்றும் வெளி மாநிலத்தினர் வசிக்கின்றனர்.
இவர்கள் 'ஒரே நாடு... ஒரே ரேஷன்' கார்டு திட்டத்தில், இங்குள்ள கடைகளில் பொருட்கள் வாங்குகின்றனர். இதற்கேற்ப, மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளுக்கு, 5 முதல் 10 சதவீதம் வரை கூடுதலாக பொருட்கள் வழங்க வேண்டும்.
ரேஷன் கடைகளில் பல இடங்களில் உதவியாளர் (பேக்கர்) இல்லை. சில கடைகளுக்கு ஊழியர்கள் கூடுதல் பொறுப்பாகவும், பகுதி நேர கடைகளுக்கும் நியமிக்கப்பட்டுள்ளனர். 'தாயுமானவர்' திட்டத்தில் வீடு தேடிச் சென்று பொருட்கள் வழங்குவதில் சிரமம் உள்ளது.
பெரும்பாலான கடைகளில் பெண் ஊழியர்கள் தான் பணியாற்றுகின்றனர். நிர்வாகத்தில் உதவியாளர்கள் நியமிக்கப்படாத நிலையில் சில இடங்களில் இவர்கள் தங்கள் பொறுப்பில் உதவிக்கு ஆட்களை வைத்துக் கொள்கின்றனர்.
இது பெரும்பாலும் நிர்வாகங்களுக்கும் தெரியும். இது போன்ற ஊழியர்களை சிலர் சமூக ஆர்வலர்கள் என்ற பெயரில் மிரட்டுவது, பிரச்னை செய்வது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர்.
இது போன்ற நபர்கள் மீது மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இது போன்ற ஆட்கள் மீது உரிய ஆதாரங்களுடன் புகார் அளிக்கவும் சங்கத்தின் சார்பில் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

