/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'சகோதயா' விளையாட்டு போட்டி; எஸ்.சி.வி., சென்ட்ரல் பள்ளி அபாரம்
/
'சகோதயா' விளையாட்டு போட்டி; எஸ்.சி.வி., சென்ட்ரல் பள்ளி அபாரம்
'சகோதயா' விளையாட்டு போட்டி; எஸ்.சி.வி., சென்ட்ரல் பள்ளி அபாரம்
'சகோதயா' விளையாட்டு போட்டி; எஸ்.சி.வி., சென்ட்ரல் பள்ளி அபாரம்
ADDED : டிச 07, 2024 06:59 AM

திருப்பூர்; கோவை, திருப்பூர் சகோதயா கூட்டமைப்பு பள்ளி சார்பில், சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு இடையேயான விளையாட்டு போட்டியில், திருப்பூர், கணியாம்பூண்டி, எஸ்.சி.வி., சென்ட்ரல் சீனியர் செகண்டரி பள்ளி மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.
கால்பந்து போட்டியில் 12 மற்றும் 14 வயது பிரிவு, மாணவர் - மாணவியர் பிரிவு இரண்டிலும் முதலிடம், 19 வயது மாணவர்கள் பிரிவில் மூன்றாமிடம்.
சிலம்பம் இரட்டைக்கம்பு சுற்றலில், 14 வயது மாணவியர் பிரிவில் முதலிடம், 12 வயது மாணவர் (22 கிலோவுக்குக் குறைவான எடைப் பிரிவில்) முதலிடம், 14 வயது மாணவர் (30 கிலோவுக்கு குறைவான எடைப் பிரிவு) 2வது இடம், 40 கிலோவுக்கு குறைவான எடைப் பிரிவில் மூன்றாமிடம்.
தடகளப் போட்டிகளில், 19 வயது மாணவர் பிரிவு, 100 மீ., - 200 மீ., - 1500 மீ., என ஓட்டப்பந்தயத்திலும் முதலிடம், 14 வயது மாணவர் பிரிவு, 600 மீ., ஓட்டத்தில் மூன்றாமிடம், 12 வயது மாணவர் பிரிவில், 400 மீ., ஓட்டத்தில் முதல் பரிசு, 200 மீட்டர் ஓட்டத்தில் மூன்றாம் பரிசு பெற்றுள்ளனர்.
வெற்றி பெற்றவர்களை பள்ளி தாளாளர் முருகசாமி, முதல்வர் தாரணி, ஒருங்கிணைப்பாளர் தீபா, உடற்கல்வி ஆசிரியர் சிவசங்கர் மற்றும் பள்ளி நிர்வாகத்தினர், பாராட்டினர்.