/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சகோதயா விளையாட்டு சிவா நிகேதன் பள்ளி சபாஷ்
/
சகோதயா விளையாட்டு சிவா நிகேதன் பள்ளி சபாஷ்
ADDED : ஜூலை 26, 2025 11:42 PM

திருப்பூர் : திருப்பூர், சகோதயா பள்ளிகள் கூட்டமைப்பு சார்பில், பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில், சிவா நிகேதன் பள்ளி மாணவர்கள் பல்வேறு போட்டிகளில் சாதித்தனர்.
எறிபந்து விளையாட்டு, 14 வயது மாணவிகள் பிரிவு போட்டியில், முதலிடம்; 12 வயது மாணவர் பிரிவில், இரண்டாமிடம் பெற்றது. ஸ்கேட்டிங் போட்டியில், மாணவி சயல் ஜெயின், 100 மற்றும், 200 மீ., பிரிவில் முதலிடம் பெற்றார். மாணவி ஸ்ரீநிதி, மாணவன் கவின் ஆகியோர், 100, 200 மீ., பிரிவில் இரண்டாமிடம்; மாணவர் ஆர்யா, 300 மற்றும் 200 மீ., பிரிவில் இரண்டாமிடம்; மாணவர் பெலிக்ஸ், 200 மற்றும், 300 மீ., பிரிவில் இரண்டாமிடம் பெற்றனர். மாணவர் ரோஷன், 100 மற்றும் 200மீ., பிரிவில், மூன்றாமிடம் பெற்றார்.
விளையாட்டில் சாதித்த மாணவர்களை பள்ளி இயக்குனர்கள் அமிர்தா பிரபாகரன், கிருபா ெஷட்டி, பள்ளி முதல்வர் கங்காமோகன் ஆகியோர் வாழ்த்தினர்.

