/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சகோதயா விளையாட்டு போட்டிபழனியப்பா பள்ளி பதக்க வேட்டை
/
சகோதயா விளையாட்டு போட்டிபழனியப்பா பள்ளி பதக்க வேட்டை
சகோதயா விளையாட்டு போட்டிபழனியப்பா பள்ளி பதக்க வேட்டை
சகோதயா விளையாட்டு போட்டிபழனியப்பா பள்ளி பதக்க வேட்டை
ADDED : நவ 13, 2024 05:27 AM

அவிநாசி : சீனியர் மாணவர்களுக்கான, 8வது சகோதயா விளையாட்டுப் போட்டிகள் சமீபத்தில் நடந்தது.
இதில் பங்கேற்ற, அவிநாசி, கச்சேரி வீதி, மாமரத்தோட்டத்திலுள்ள பழனியப்பா சர்வதேசப் பள்ளி மாணவர்கள் பல்வேறு போட்டிகளில் பதக்கங்களை அள்ளினர். 14 வயதுக்குட்பட்ட மாணவியருக்கான வட்டெறிதல் போட்டியில், வெள்ளி பதக்கம்; 16 வயதுக்குட்பட்ட, 100, 200 மீ., ஓட்டப் போட்டியில் வெள்ளி; நீளம் தாண்டுதலில் வெண்கலம்; ஈட்டி எறிதலில் நான்காமிடம், தொடர் ஓட்டத்தில் வெண்கலம் வென்றனர்.மாணவர்களுக்கான உயரம் தாண்டுதல் போட்டியில், வெள்ளி; 400 மீ., தொடர் ஓட்டத்தில் நான்காமிடம் பெற்றனர். பதக்கம் குவித்த மாணவ, மாணவியரை பள்ளி நிர்வாகத்தினர் பாராட்டி வாழ்த்தினர்.