/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சலகெருதுகள் பால் எடுத்தல் விழா கிராமங்களில் பாரம்பரிய நிகழ்ச்சி
/
சலகெருதுகள் பால் எடுத்தல் விழா கிராமங்களில் பாரம்பரிய நிகழ்ச்சி
சலகெருதுகள் பால் எடுத்தல் விழா கிராமங்களில் பாரம்பரிய நிகழ்ச்சி
சலகெருதுகள் பால் எடுத்தல் விழா கிராமங்களில் பாரம்பரிய நிகழ்ச்சி
ADDED : ஜன 17, 2025 11:42 PM
உடுமலை,; உடுமலை பகுதியில், பொங்கலை சிறப்பிக்க, கிராமத்துக்கு வந்த, சலகெருதுகளுக்கு, பொங்கலிட்டு, நாட்டுப்புற பாடல்களை பாடி, வழிபாடு நடத்தி, மக்கள் பிரியா விடை கொடுத்தனர்.
உடுமலை பகுதி கிராமங்களில், பொங்கலன்று, மாடுகள் ஈன்றெடுக்கும் காளை கன்றுகளை, தெய்வமாக கருதி, சலகெருது என பெயரிட்டு, வளர்க்கின்றனர்.
பிற கால்நடைகளை போலில்லாமல், குறிப்பிட்ட வயது கடந்தும், இந்த எருதுகளுக்கு மூக்கணாங்கயிறு கூட அணிவிக்கப்படுவதில்லை.
இந்த சலகெருதுகளை மலைவாழ் கிராம மக்களிடம், வளர்ப்பிற்காக, கிராம மக்கள் அனுப்புகின்றனர். மார்கழி மாதம் துவங்கியதும், இந்த எருதுகள் சம்பந்தப்பட்ட கிராமங்களுக்கு அழைத்து வரப்பட்டு, சிறப்பு பூஜைகளுடன், வரவேற்கப்படுகிறது.
அம்மாதம் முழுவதும், இரவு நேரங்களில், சலகெருதுகளின் கால்களில், சலங்கை அணிவிக்கப்பட்டு, உருமி இசைக்கேற்ப, ஆட்டக்காரர் முன்னால் ஆடிச்செல்ல, இந்த எருதுகள் அவர்களை பின்தொடர்ந்து செல்லும் வகையில், ஆட்டத்துக்கு பழக்கப்படுத்துகின்றனர்.
தை மாதம் சிறப்பாக துவங்கி, விவசாயமும், கால்நடை வளமும் செழிக்க, தங்கள் கிராமத்துக்கு, சிறப்பு விருந்தினராகவும், தெய்வத்தின் அம்சமாகவும், சலகெருது வருவதாக இப்பகுதி மக்கள் இன்றளவும் நம்பி வருகின்றனர்.
பொங்கலன்று, இந்த எருதுகளை அலங்கரித்து, சோமவாரப்பட்டி ஆல்கொண்டமால் கோவில், ஆண்டியூர் சல்லிவீரய்யன் கோவில், பள்ளபாளையம் காளியப்பர் கோவில் உட்பட கோவில்களுக்கு அழைத்துச்சென்றனர்.
பின்னர், அவற்றை வழியனுப்பும் விதமாக, சிறப்பு பால் எடுத்தல் என்னும் பாரம்பரிய வழிபாடு அனைத்து கிராமங்களிலும் நடந்தன.
இந்நிகழ்ச்சியில், முற்காலத்தில், கால்நடை மேய்ச்சலுக்கு பயன்படுத்தப்பட்ட, புல்லாங்குழல், கம்பளி, மூங்கில் கம்பு ஆகியவை வைத்து பூஜைகள் நடந்தன. தொடர்ந்து நாட்டுப்புற பாடல்கள் பாடப்பட்டன.
தேவராட்டம், கும்மியாட்டம் ஆகியவற்றை கிராம மக்கள் ஒருங்கிணைந்து ஆடினர். வெற்றிலை மற்றும் பால் ஆகியவை வைக்கப்பட்ட தட்டை சலகெருது அணுகும் வரை, பாடப்பட்டன.
கிராம மக்கள் கூறுகையில், 'ஆண்டுதோறும், சலகெருது அழைத்தல் நிகழ்ச்சியை தவறாமல் நடத்துகிறோம். கிராமத்து தெய்வமாக அவற்றை போற்றி, பராமரிக்கிறோம். நீண்ட கால பாரம்பரியத்தை கைவிடாத வகையில், இளைஞர்களும் ஆர்வத்துடன் இப்பூஜைகளை நடத்தி வருகின்றனர்,' என்றனர்.