/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'குட்கா' பொருள் விற்பனை; 44 நிறுவனங்கள் சிக்கின!
/
'குட்கா' பொருள் விற்பனை; 44 நிறுவனங்கள் சிக்கின!
ADDED : நவ 15, 2024 11:03 PM
திருப்பூர் ; திருப்பூர் மாவட்ட உணவுபாதுகாப்பு நியமன அலுவலர் விஜயலலிதாம்பிகை தலைமையில், உணவு பாதுகாப்பு, உள்ளாட்சி துறை அதிகாரிகள், போலீசார் இணைந்து, குட்கா விற்பனை குறித்து ஆய்வு நடத்தினர். மாவட்டம் முழுவதும் டாஸ்மாக் மதுக்கடைகள், மளிகை கடைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
கடந்த இரு வாரங்கள் நடத்தப்பட்ட ஆய்வில், தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை செய்த 44 உணவு நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன; மொத்தம், 12 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இவற்றில், 4 உணவு நிறுவனங்கள் மீது, இரண்டாவது முறை குற்றத்துக்காக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் விஜயலலிதாம்பிகை கூறியதாவது:
தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனை குறித்து தொடர்ந்து ஆய்வு நடத்தி, நடவடிக்கை எடுத்த வருகிறோம். முதல் முறை குற்றத்துக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதமும், 15 நாட்கள் கடை பூட்டப்பட்டு வர்த்தகம் முடக்கப்படுகிறது.
இரண்டாவது முறை குற்றத்துக்கு, 50 ஆயிரம் ரூபாய் அபராதமும், 30 நாட்கள் கடை பூட்டப்படுகிறது. மூன்றாவது முறை குற்றத்துக்கு, ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து, 90 நாட்கள் கடை பூட்டப்படுகிறது.
குட்கா விற்பனை செய்து நடவடிக்கைக்கு உள்ளாகும் நிறுவனங்கள், அபராத தொகையை, மின்னணு பரிவர்த்தனை வாயிலாக அரசு கருவூலத்தில் மட்டுமே செலுத்த வேண்டும்.
பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் குட்கா விற்பனை செய்வது குறித்து தெரிந்தால், 94440 42322 என்கிற எண்ணில் தொடர்புகொண்டு தெரிவிக்கலாம். TN food safety consumer app என்கிற செயலியிலும் புகார் பதிவு செய்யலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.