/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கிருஷ்ண ஜெயந்திக்கு சிலைகள் விற்பனை
/
கிருஷ்ண ஜெயந்திக்கு சிலைகள் விற்பனை
ADDED : ஆக 05, 2025 11:45 PM

உடுமலை; கிருஷ்ண ஜெயந்தி வருவதையொட்டி, உடுமலை சுற்றுப்பகுதியில் விதவிதமான கிருஷ்ணர் சிலைகள் விற்பனை தீவிரமாகியுள்ளது.
கிருஷ்ண ஜெயந்தி விழா ஆக., 16ம் தேதி கொண்டாடப்படுகிறது. கோவில்களில் மட்டுமில்லாமல் வீடுகளிலும் கிருஷ்ண ஜெயந்தி விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
குழந்தைகளுக்கு ராதை, கிருஷ்ணராக வேடமிட்டும், கிருஷ்ணரின் கால் சுவடுகளை வீடுகளில் வரைந்தும் சிறப்பு பூஜைகள் செய்யப்படுகிறது. மேலும், கிருஷ்ணருக்கு பிடித்த வெண்ணை, முறுக்கு, பால் போன்ற பண்டங்களை படைத்து வழிபடுகின்றனர்.
உடுமலை சுற்றுப்பகுதியில் கிருஷ்ண ஜெயந்தி விழாவையொட்டி, சிலைகள் விற்பனை தீவிரமாக நடக்கிறது. உடுமலை - தாராபுரம் ரோடு சிவசக்தி காலனி பகுதியில், பல்வேறு விதமான கிருஷ்ணர் சிலைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
தவழும் கிருஷ்ணர், குழந்தை கிருஷ்ணர், வெண்னை பானையுடன் இருப்பது, குழல் ஊதுவது போன்ற பல்வேறு விதமாக, நுாறு முதல் ஆயிரம் ரூபாய் வரை சிலைகள் விற்பனை நடக்கிறது.