/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
இ-நாம் திட்டத்தில் உளுந்து விற்பனை
/
இ-நாம் திட்டத்தில் உளுந்து விற்பனை
ADDED : டிச 23, 2024 10:12 PM
உடுமலை; உடுமலை ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில், இ-நாம் திட்டத்தின் கீழ், விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்த உளுந்து விற்பனை செய்யலாம், என அதிகாரிகள் தெரிவித்தனர்.
உடுமலை பகுதிகளில், சாகுபடி செய்யபட்ட உளுந்து பயிர் அறுவடை துவங்கியுள்ளது. விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்த உளுந்தை, ஒழுங்கு முறை விற்பனைக்கூடங்களில் செயல்படும், இ-நாம் திட்டத்தின் கீழ் விற்பனை செய்யலாம்.
ஏலத்தில், உள்ளூர் மற்றும் வெளியூர் வியாபாரிகள் பங்கேற்று, எந்த விதமான தரகு, கமிஷன் இல்லாமல், கூடுதல் விலைக்கு கொள்முதல் செய்து வருகின்றனர்.
கொள்முதல் செய்யும் விளைபொருட்களுக்கு உரிய தொகை, உடனடியாக விவசாயிகளின் வங்கிக்கணக்கிற்கு வரவு வைக்கப்படும்.
மேலும் விபரங்களுக்கு, விவசாயிகள் தங்களின் ஆதார் எண், வங்கி கணக்கு பாஸ் புத்தகத்தின் முதல் பக்க நகலுடன், உடுமலை ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளரை அணுகலாம், என திருப்பூர் விற்பனைக்குழு முதுநிலை மேலாளர் தெரிவித்துள்ளார்.