/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
களைகட்டும் பொங்கல் பொருட்கள் விற்பனை; இன்று போகிப்பண்டிகை
/
களைகட்டும் பொங்கல் பொருட்கள் விற்பனை; இன்று போகிப்பண்டிகை
களைகட்டும் பொங்கல் பொருட்கள் விற்பனை; இன்று போகிப்பண்டிகை
களைகட்டும் பொங்கல் பொருட்கள் விற்பனை; இன்று போகிப்பண்டிகை
ADDED : ஜன 12, 2025 11:09 PM

உடுமலை; பொங்கல் பண்டிகை இன்று துவங்குவதையொட்டி, உடுமலை சுற்றுப்பகுதியில், பண்டிகை பொருட்களின் விற்பனை களைகட்டியுள்ளது.
தை மாதம் முதல் நாள், பொங்கல் திருநாளாகவும், இரண்டாம் நாள் மாட்டுப்பொங்கலாகவும் தமிழகத்தில் கொண்டாடப்படுகிறது.
மார்கழி மாத இறுதி நாளான இன்று போகி பண்டிகையாக கொண்டாடப்படுகிறது.
இந்நாளன்று, வீட்டிலுள்ள பழைய பொருட்களை, அகற்றிவிட்டு புதிய வாழ்வு துவங்கி வளமை பெருக வேண்டும் என வழிபாடு செய்யப்படுகிறது.
நாளை பொங்கல் பண்டிகையொட்டி, உடுமலை சுற்றுப்பகுதியில், பொங்கல் வைத்து வழிபடுவதற்கான பொருட்களின் விற்பனை 'ஜோராக' நடக்கிறது.
ராஜேந்திரா ரோடு, சந்தைப்பகுதி, பஸ் ஸ்டாண்ட் பகுதிகளில் பொங்கல் வைக்கும் மண் பானைகள் விதவிதமான அளவுகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
அரைக்கிலோ கொள்ளளவு கொண்ட மண் பானை, 100 ரூபாய் முதல் இரண்டு கிலோ அளவு வரை பானைகள் விற்கப்படுகின்றன.
அதற்கான மண் அடுப்புகள் ஒற்றை அடுப்பு, 200 ரூபாய்க்கும், இரட்டை அடுப்பு, 400 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
கரும்புகள் ஜோடி, 80 ரூபாய் முதல் நுாறு ரூபாய் வரை அதன் உயர அடிப்படையில் விற்கப்படுகிறது. மஞ்சள் கொத்து ஜோடி, 30 முதல் 50 ரூபாய்க்கும், பூளைப்பூ 20 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. வீதிகளில் மக்கள் கூட்டமும் களை கட்டியுள்ளது.
மேலும், பொங்கல் வைப்பதற்கு தேவையான திராட்சை, வெல்லம், முந்திரி, உள்ளிட்ட பொருட்கள் குறிப்பிட்ட அளவுகளில் 'பேக்' செய்யப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.
இப்பொருட்களை வாங்குவதற்கு, உடுமலை மட்டுமின்றி, சுற்றுப்பகுதியிலுள்ள கிராம மக்களும் ஆர்வமுடன் பெற்று செல்கின்றனர்.
பொங்கலை கொண்டாட, உடுமலை சுற்றுப்பகுதி மக்கள் மகிழ்ச்சியுடன் தயாராகி வருகின்றனர்.