/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
உழவர் சந்தைகளில் விற்பனை அமோகம்
/
உழவர் சந்தைகளில் விற்பனை அமோகம்
ADDED : பிப் 04, 2025 07:40 AM
திருப்பூர்; திருப்பூர் வடக்கு மற்றும் தெற்கு உழவர் சந்தையில் கடந்த ஜன., மாதத்தில், 11.36 கோடி ரூபாய்க்கு காய்கறி வர்த்தகம் நடந்துள்ளது.திருப்பூர், புதிய பஸ் ஸ்டாண்ட் பின் உள்ள வடக்கு உழவர் சந்தையில், ஜன., மாதத்தில், 798 மெட்ரிக் டன் காய்கறி வந்ததில், 3.22 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடந்துள்ளது. 3,034 விவசாயிகள், ஒரு லட்சத்து, 28 ஆயிரம் வாடிக்கையாளர் வந்துள்ளனர்.
பல்லடம் ரோட்டில் உள்ள தெற்கு உழவர் சந்தையில், 2,161 டன் காய்கறிகள் வந்தன. 8,162 விவசாயிகளும், 1.16 லட்சம் வாடிக்கையாளர்களும் வந்துள்ளனர். மொத்தம், 8 கோடியே, 14 லட்சம் ரூபாய்க்கு காய்கறி விற்பனையாகியுள்ளது. இரு சந்தைகளிலும், ஜன., மாதம், 11.36 கோடிக்கு காய்கறி வர்த்தகம் நடந்துள்ளது.
உழவர் சந்தை அலுவலர்கள் கூறுகையில், 'ஜன., மாதம், புத்தாண்டு, பொங்கல் பண்டிகை தொடர்விடுமுறை, குடியரசு தினம் என விடுமுறை தினங்களில் சந்தையை தேடி வந்த வாடிக்கையாளர்கள் அதிகம். தக்காளி உட்பட, அனைத்து காய்கறிகளின் விலையும் நடப்பு மாதம் குறைவாக இருந்தது. கேரட், பீன்ஸ், அவரை, கத்தரி உள்ளிட்ட காய்கறிகள் கிலோ, 70 ரூபாயை தாண்டாததால், விற்பனை சுறுசுறுப்பாக நடந்தது. மழை இல்லாதது, ஜன., மாதத்தில ஆறுதல். பனியின் தாக்கத்தால், கொத்தமல்லி வரத்து வெகுவாக குறைந்திருந்தது,' என்றனர்.

