/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கோடை வெப்பத்தை தணிக்கும் மண்பானைகள் விற்பனை ஜோர்
/
கோடை வெப்பத்தை தணிக்கும் மண்பானைகள் விற்பனை ஜோர்
ADDED : மார் 17, 2024 11:55 PM

உடுமலை:உடுமலையில், கோடையின் தாக்கத்தை தணிக்க, மண்பானைகளின் விற்பனை களைகட்டியுள்ளது.
உடுமலை சுற்றுப்பகுதியில், கோடையின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. மார்ச் இறுதியில் துவங்க வேண்டிய கோடை, கடந்த மாதம் பாதியில் இருந்து வாட்டிக்கொண்டிருக்கிறது.
வீடுகள், வணிக வளாகம் என அனைத்து இடங்களிலும் குடிநீரை காய்ச்சாமலேயே, சுடுநீராகும் அளவுக்கு வெப்பம் அதிகரிக்கிறது. இதனால் மண்பானைகளின் 'மவுசு' அதிகரித்துள்ளது. உடுமலை பஸ் ஸ்டாண்ட், ராஜேந்திரா ரோடு, வெங்கடகிருஷ்ணா ரோடு, ஜல்லிபட்டி, புக்குளம் உள்ளிட்ட பகுதிகளில் விற்பனை களை கட்டியுள்ளது.
குடிநீர் பில்டர் போல குழாய் பதித்தது, சிறிய தண்ணீர் குவளைகள், கோப்பைகள் உட்பட பல்வேறு ரகங்களில் மண்பாண்டங்கள் விற்பனை நடக்கிறது. 200 ரூபாய் முதல் ஆயிரம் ரூபாய் வரையிலும் பலவகையான மண்பாண்டங்கள் விற்கப்படுகிறது. கோடையை சமாளிக்க, மக்களும் மண்பானைகளை அதிகம் விரும்பி வாங்கிச்செல்கின்றனர்.

